TN  2026  – விமர்சனம்

 

ஆத்திக நாத்திக முன்னேற்ற கழகம் டி.என் 20 26 படத்தின் மையக்கரு. நட்டி வடக்கில் இருந்து வரும் தமிழ் பேசத் தெரியாத வடக்கத்தியன். அவரை வைத்து தமிழ் படங்கள் எடுக்கிறார் தம்பி ராமையா. பொது  இடங்களில்  சினிமாவை  மீறி  அரசியல் பேசுகிறார்.  அரசியல்வாதிகள்  அவர் மீது வன்மம் காட்ட அவர்களுக்கு பதிலடி கொடுக்க அரசியலில் இறங்குகிறார். பிறகு நடப்பது என்ன இதுவே படத்தின் மையக்கரு.

நட்டி நட்சத்திர நாயகனாக அரசியலில் அவதார புருஷன் ஆக தன் பங்களிப்பை சிறப்பாக ஆற்றி இருக்கிறார் தசாவதாரம் கமலுக்கு பிறகு அதிகமான கெட்டப்புகள் போட்டது நட்டியாக தான் இருக்க வேண்டும் கெட்டப்புகளில் அசத்துகிறார்.

நட்டியுடன் பயணிக்கும் தம்பி ராமையாவுக்கு நட்டியின் மீது பாசம் வருவது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை என்றாலும் கூட அதன் பின்புலத்தில் எம்ஜிஆர் காட்டப்படுவதால் அந்த லாஜிக்கும் அடிபட்டு போகிறது. காட்சிக்கு காட்சி காமெடி சரவெடிகளை தனது வசனங்களால் அள்ளித் தெளித்து ரசிகர்களை உற்சாக மனநிலையிலேயே தன் பங்கிற்கு வைத்திருக்கிறார் தம்பி ராமையா. அமைதிப்படை மணிவண்ணனுக்கு பிறகு அந்த கதாபாத்திரம் தம்பி ராமையாவுக்கு மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

இளவரசு, எம்எஸ் பாஸ்கர் இருவரும் அரசியல்வாதி கேரக்டர்களை அல்வா சாப்பிடுவது போல செய்து இருக்கிறார்கள். கூடவே ஒரு சண்டைக் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்கள். கதாநாயகியாக ஸ்ரீதா ராவ் ஆரம்பத்தில் அமைதியானவராக இருந்து பின்னர் ஆக்ரோசமாக மாறும் காட்சிகளில் நிச்சயம் நமக்கு திகைப்பூட்டுகிறார். கதையில் இடைவேளைக்குப்பின் ஏதோ சாதிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சாந்தினி தமிழரசன் எண்பதுகளின் நடிகையாக கணக்கச்சிதமாக பொருந்தியுள்ளார். நட்டி, தம்பி ராமையா இவர்களின் காமெடி கூட்டணியில் தானும் சேர்ந்து கொண்டு கலகலப்பூட்டி இருக்கிறார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. குறிப்பாக அவர் ஒரு மாற்று அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டு நட்டியை எதிர்த்துப் பேசும் வசனங்கள் எல்லாம் விலா நோக சிரிக்க வைக்கின்றன. சில காட்சிகளில் மட்டுமே வந்து கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டு பறந்து விடுகிறார் யாஷிகா ஆனந்த்.

இசையமைப்பாளர் தர்புகா சிவா இது அரசியல் படம் என்பதால் பாடல்களின் வீச்சை குறைத்துக் கொண்டு பின்னணி இசையால் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நின்று இருக்கிறார்.

அரசியல் படம் என்றாலே மாபெரும் கூட்டம் தானே ? அந்த வகையில் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா படம் முழுக்க பிரம்மாண்டத்தை தனது கேமராவால் நிரப்பி இருக்கிறார்.

கொஞ்சம் கூட பார்வையாளர்களுக்கு தொய்வு ஏற்பட்டு விடாதபடி அரல் ஆர் தங்கம் நேர்த்தியான விறுவிறுப்பான தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

அரசியல் படம் என்றாலே சம கால அரசியல் கட்சிகளை கிண்டல் செய்வது, தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெறுவதை தவிர்க்க முடியாது. இந்த படத்திலும் அவை இடம் பெற்றிருந்தாலும் அவற்றை பெரிய அளவில் யாரையும் புண்படுத்தும்படி செய்யாமல் நகைச்சுவையாக ரசித்து விட்டு போகும்படி படமாக்கியதில் இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பை மிகச் சரியாக கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.

தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி சிறந்த தமிழ் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளிப்பதில் சிறந்த தயாரிப்பார்கள் என்பது நாம் ஏற்கனவே பார்த்து தெரிந்ததுதான். அந்த வரிசையில் இந்த TN  2026 ஒரு சிறந்த படம் மட்டுமல்லாது இக்கால அரசியலில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அல்லல்களை அழகாக நகைச்சுவையாக நமக்கு தந்திருக்கிறார்கள் இவரின் பங்களிப்பு தமிழ் திரை உலகின் சிறந்த பங்களிப்பு தமிழ் ரசிகர்களுக்கு இவர்களின் சேவை மிகவும் தேவை..

.

 

tn-2026-movie review
Comments (0)
Add Comment