ஒரு தேனிலவு, ஒரு காணாமல் போதல், பனிக்குள் புதைந்த பல ரகசியங்கள் – இது தான் ‘பனி விழும் இரவு’.
கொடைக்கானலுக்கு சந்தோஷமாக வரும் அருண் கார்த்திக் தம்பதி. திடீரென மனைவி மாயம். காவல் நிலையத்தில் புகார். இங்கிருந்து தான் படம் சூடு பிடிக்கிறது.
இயக்குனர் சே.ரா. ராஜேஷ், சாதாரண மனிதனுக்குள் இருக்கும் ரகசியங்களை வைத்து கதை பின்னியிருக்கிறார். ஹீரோவை நல்லவனா? கெட்டவனா? என நம்மையே குழப்புவதில் ஜெயித்திருக்கிறார்.
அருண் கார்த்திக் பதட்டத்தை அழகாக காட்டியிருக்கிறார். பெங்காலி நடிகை எனாக்ஷி கங்குலிக்கு முக்கியமான பாத்திரம் சேரன்ராஜ், கருப்பு நம்பியார், கஜராஜ் ஆகியோர் நிறைவு.
படத்தின் ஆத்மா அதன் கிளைமாக்ஸ். ஒரு லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து வைத்திருக்கும் ட்விஸ்ட் நிச்சயம் எதிர்பார்க்காதது. அதை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.
கொடைக்கானல் லொகேஷன், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தின் அழகு தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி
பனி விழும் இரவு —டீசண்ட் த்ரில்லர்.