ட்ரோன்ஸ்’ (Drones) – விமர்சனம்*

 

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம் , குரேஷி, சினிமாவாலா சதீஷ், RJ தீபக். நடிப்பில் வந்திருக்கும் படம்

படம் என்ன சொல்ல வருகிறது

கல்லூரியில் இருந்து Suspend செய்யப்பட்ட 3 மாணவர்கள் – Kish, Rush, Dush. அவர்கள் ஒரு விஞ்ஞானி Padmanaban-ன் ” வீட்டில் தஞ்சம் கொள்கிறார்கள்.

அங்கு இருக்கும் ட்ரோன் மூலம் சித்தி இத்னானி தற்கொலை முயற்சியை பார்த்து தடுக்கிறான் காதல் கொள்கிறான் அவளை காதலிக்கிறான், அவளை சுற்றி ஒரு சூனியக்காரி, பொம்மையாக மாற்றும் மர்மம் இருக்கிறது

அங்கு நாயகன் மாற்றிக்கொள்ள அது அவள் வீடு என்று தெரியாமல் தான் தஞ்சம் அடைந்த வீடு போல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான்
அவரை தேடி வரும் நண்பர்களும் காவல்துறை அதிகாரியும் சிக்கிக் கொள்ள அதிலிருந்து எப்படி வருகிறார்கள் என்பதை படத்தின் கதைக்களம்

இந்தப் படம் Horror + Fantasy + Comedy. வகையை சேர்ந்தது இயக்குனர் R. ராகவ் மிர்தாத் இதை ‘சர்ரியலிஸ்ட் பேண்டஸி’ என்கிறார். கனவில் மட்டும் நடக்கும் விசித்திரங்கள் நிஜத்தில் நடந்தால் என்ன ஆகும் என்பது தான் Concept.

படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகன் அருகில் இருக்கும் பெண்ணைத் தவிர்த்து அழகாக இருக்கும் சித்தி இதானி ையை காதலிப்பதும் காதல் என்பது அழகு மட்டும் சான்றிதல்ல அதற்கும் மேலானது என்பதை இயக்குனர் இறுதிக்காட்சியில் மிக அழகாக சொல்லி இருக்கிறார்

நாயகி சித்தி இதானி ஜவுளிக்கடை பொம்மை போல் மிக அழகாக இருக்கிறார் இது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் மிகக் கொடூரம் அதை படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் இவருக்கு அந்நியன் வகை கதாபாத்திரம்
– நடிகை அஞ்சலி நாயர் நண்பர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் – நிகழ்கால மங்கை நாயகனை ஒரு தலையாக காதலிக்கும் போதும்
அவன் வேறொருத்தியை நாடும்போதும் பிறகு அவன் காணாமல் போனதும்

தேடுவதில் ஒரு நண்பியாகவும் இறுதிக்காட்சியில் நட்புக்கும் காதலுக்கும் இவர் சொல்லும் வசனம் இயக்குனரின் டச்

தேவதர்ஷினி படம் முழுக்க இவரின் ராஜாங்கம் தான் நடக்கிறது படத்தில் நாயகன் நாயகி இரு கதாபாத்திரமே இவர்தான் என்பது போல் இவர் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது

இறுதிக்காட்சியில் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார் ஒரு சிலர் விஞ்ஞானத்தை மையமாக வைத்து படம் எடுப்பார்கள்
ஒரு சிலர் பேய் பிசாசு புனர் ஜென்மம் இதை மையமாக வைத்து படம் எடுப்பார்கள்
சில பேர் நகைச்சுவை மட்டும் நம்பி படம் எடுப்பார்கள்
ஆனால் நமது இயக்குனர் இவை மூன்றையும் அழகாக தேவைக்கேற்ப திரைக்கதையை செதுக்கி
இயக்கத்தை இயல்பாக செய்து இருக்கிறார்
வாழ்த்துக்கள்
சூப்பர் ஸ்டார் படம் ‘
:ஜெயிலர் 2 .
என்ற சூறாவளியில் தமிழ்நாட்டு மக்கள் இருக்கும்போது அந்த சூறாவளிக்குள் தன்னுடைய “ட்ரோன்ஸ்’ ‘ஸை பறக்க விடுகிறார் படத்திற்கு நமது வாழ்த்துக்கள்

ட்ரோன்ஸ்’- தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி
ரேட்டிங் 3/5

Comments (0)
Add Comment