ஹைக்கூ விமர்சனம்

ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா, பெமினா ஜார்ஜ்
இயக்கம்: யுவராஜ் சின்னசாமி*

படம் என்ன சொல்ல வருகிறது
மனோ (ஏகன்) கல்லூரியில் ஒரு சிறு குறும்பால் சஸ்பெண்ட் ஆகிறான். வேறு கல்லூரியில் சீட் கிடைக்காமல், கோயம்புத்தூரில் சமீபத்தில் Co-ed ஆன ஒரு பெண்கள் கல்லூரியில் சேர்கிறான். அங்கு அவன் ஒருவன் மட்டுமே ஆண்.

அங்கு கோடி (ஸ்ரீதேவி) உடன் காதல் வருகிறது. ஆனால் மனோவின் அதீத பொசசிவ் குணத்தால் அந்த முதல் காதல் உடைகிறது.

சில வருடங்கள் கழித்து, சென்னையில் ஐடி கம்பெனியில் டீம் லீடராக இருக்கும் மனோவின் வாழ்க்கையில் இன்டர்னாக வருகிறாள் நிவேதா (பெமினா). அவளுக்கு ஏற்கனவே ஒரு டாக்சிக் காதலன் இருக்கிறான். அவனிடமிருந்து வெளியே வர மனோ உதவுகிறான். அங்கிருந்து இரண்டாவது காதல் தொடங்குகிறது. ஆனால் பழைய காதலின் நிழல் இந்த புதிய காதலை வாழ விடுகிறதா? என்பதே படம்.

இது வழக்கமான காதல் படம் என்ற மாயையை உடைத்து ஒரு புதிய கோணத்தை நமக்கு காட்டுகிறது தான் காதலித்த பெண் தன்னை எதனால் வெறுத்தால் அதனால் அடுத்த காதல் காதலியிடம் அதை தவிர்க்க பார்க்கும் நாயகன் ஆனால் நாயகியோ அவள் இல்லை நான் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம் என்ற போர்வையில் இரண்டாம் காதல் ஒரு கேள்விக்குறியாக நிற்கிறது அவரவர் பக்கம் நியாயங்கள் இருந்தாலும் ஒரு நியாயத்துக்குள் ஒரு காதல் இருக்கிறது அந்த காதலே அவர்களை இணைக்கிறது

இயக்குனர் யுவராஜின் நல்ல விஷயம், பொசசிவ்னெஸ்ஸை காதலாக காட்டாமல், அது ஒரு குறை என்று காட்டியிருக்கிறார். G

ஏகனுக்கு முதல் படம் தனி ஹீரோவாக. முதல் பாதி கல்லூரி பையனாக கலகலப்பாகவும், இரண்டாம் பாதி மெச்சூர்டு மனிதனாகவும் நன்றாக மாறியிருக்கிறார். அவர் நடிப்பில் நடிப்பு என்று தெரியாமல் ஒரு எதார்த்த நாயகனாக நாம் பார்க்கும் ஒரு சராசரி மனிதனாக நமக்கு தெரிகிறார் அதுவே அவர் வெற்றிக்கு அடித்தளம்

படத்தின் உண்மையான பலம் இரண்டு ஹீரோயின்கள் தான். ‘கோர்ட்’ புகழ் ஸ்ரீதேவி அப்பல்லா தமிழில் முதல் படம் – மிக இயல்பு. முதல் பாதி முழுக்க அவர் தான். பெமினா ஜார்ஜ் இரண்டாம் பாதியில் அமைதியான நடிப்பில் அசத்துகிறார்.

 

பெண்கள் கல்லூரியில் ஒரே ஒரு பையன் என்பது சுவாரஸ்யமான கான்செப்ட் இன்னும் அதற்குள் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கலாம் நகைச்சுவைக்கு ஏகப்பட்ட இடங்கள் அந்த காலேஜில் இருந்தாலும் கதைக்குள் மட்டுமே இயக்குனர் சென்று இருக்கிறார் வாழ்த்துக்கள்
ஹைக்கூ இது படத்தின் டைட்டிலாக இருந்தாலும் காதல் என்பது சிறியதில்லை அது வாழ்க்கையின் எல்லை வரை இருப்பது

ஹைக்கூ- காதல் கவிதை அல்ல கவிதையே காதல்

ரேட்டிங் – 4/5

Comments (0)
Add Comment