418-விமர்சம்

 

சைத்ரா ஆச்சார், ப்ரீத்தி பகதாலா, சூர்யராஜ் வீரபத்தினி, சரண் லக்கராஜு, ரமேஷ் இந்திரா, ரேகா நிரோஷாநடிப்பில் கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்- வெளி வந்திருக்கும் படம் 418
படம் என்ன சொல்ல வருகிறது

மகனை டாக்டராக்க வேண்டும் என்ற கனவில் பெற்றோர், அவனை ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கின்றனர். அந்த கல்லூரியில் 418-ம் எண் அறை 15 வருடங்களாக பூட்டப்பட்டே கிடக்கிறது. அந்த அறைக்குள் பெண்களை குறிவைத்து கொல்லும் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக கல்லூரி முழுவதும் ஒரு பேச்சு.

அந்த அறைக்கு அருகிலேயே தங்கும் நாயகனையும் அந்த சக்தி துரத்த, தன் நண்பன் உதவியுடன் கல்லூரியின் மனநல மருத்துவரை சந்திக்கிறான். பிளாஷ்பேக்

நாட்டுப்புற கலைஞரான ஒரு அனாதை பெண் (சைத்ரா ஆச்சார்), காதலித்து திருமணம் செய்து குழந்தைக்காக ஏங்குகிறாள். ஒரு துர்தேவதையிடம் செல்கிறாள். “ஆறு பெண்களை பலி கொடுத்தால் உனக்கு குழந்தை பாக்கியமும், பெரும் சக்தியும் கிடைக்கும்” என்கிறது அந்த சக்தி. அவள் மூன்று பேரை கொன்று விட்டாள். மீதி மூன்று பேர் யார்? அந்த சக்தி இப்போது யார் உடலில் புகுந்துள்ளது? என்பதே மீதிக்கதை.

 

 

முதல் பாதி மெடிக்கல் காலேஜ் மர்மம் என சுவாரஸ்யமாக தொடங்கி, இரண்டாம் பாதி பிளாஷ்பேக் சென்டிமென்ட், சூனியம் என மாறுகிறது. இரண்டு கதைகளையும் இணைக்க இயக்குனர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.

நடிப்பில் சைத்ரா ஆச்சார் தான் படத்தின் தூண். பாவப்பட்ட கிராமத்து பெண்ணாகவும், பழிவாங்கும் சக்தியாகவும் இரண்டு முகம் காட்டி நடித்திருக்கிறார். ப்ரீத்தி பகதாலா அழகிலும் நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார். மனநல மருத்துவராக வரும் ரமேஷ் இந்திரா அனுபவ நடிப்பு.

தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு, வெங்கியின் பின்னணி இசை, சவுண்ட் டிசைன் ஆகியவை படத்திற்கு பெரிய பலம்

திரைக்கதையில் தான். ஏகப்பட்ட குழப்பம் புரியாத சில கதாபாத்திரங்கள், தேவையில்லாத சத்தம், படத்தை டி.ஐ செய்தார்களா என்று தெரியவில்லை காட்சிகள் தெளிவில்லை

மொத்தத்தில்: 418 – அமானுஷ்ய ஹாரர் முயற்சி.

Comments (0)
Add Comment