சட்டமும் நீதியும் சீசன் 2 – விமர்சனம்

 

ZEE5 பில்- அக்டோபர் 23, 2026 முதல்

சீசன் 1-ன் வெற்றிக்கு பிறகு வரும் தொடர். இயக்கம் பாலாஜி செல்வராஜ்.

வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக சரவணன் மீண்டும் வருகிறார். இந்த முறை ஒரு புது வழக்கு – 4 போலீஸ்காரர்கள், ஒரு கொலை, நீதிக்கான போராட்டம்.

தன் கணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் எதிர் தரப்பில் வருகிறார். இரண்டு வழக்கறிஞர்களுக்கு இடையேயான கோர்ட் ரூம் மோதல் தான் மெயின்.

 

– சரவணன் – அமைதியான வழக்கறிஞர் வேடம். வரலட்சுமி பலமான கதாபாத்திரம், எமோஷன் + வலிமை இரண்டும் கலந்து செய்திருக்கிறார்.

முதல் சீசனில் கதாநாயகியாக வந்தவரே இந்த இரண்டாம் சீசனில் ஒரு துணை நடிகையைபோல் இன்னும் சொல்லப்போனால் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்

எதிர் தரப்பு வாதம் தற்கொலை என்று வாதாடுகிறது ஆனால் நெஞ்சுக்கு கீழ் இரண்டு தோட்டாக்கள் தற்கொலை செய்பவன் நெற்றி வாய் கழுத்து இப்படி தான் சுட்டுக் கொள்வான் துப்பாக்கியை திருப்பி நெஞ்சில் வைத்து எவனும் சுட மாட்டான் இதுவே கதையின் கருவிற்கு மிகப்பெரிய ஏமாற்றம் சரவணனிடம் எதற்காக வழக்கை வாபஸ் வாங்க பணம் கொடுக்கிறார்கள் என்று சரியாக இயக்குனர் சொல்லவும் இல்லை அங்கு லாஜிக் மீறல் அதிகம்
–
முதல் சீசனின் வெற்றியை வைத்துக்கொண்டு இரண்டாம் சீசனை வெற்றி பெற வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் இது தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்கி இருக்கும் இயக்குனருக்கும் ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்

சட்டமும் நீதியும்-2- ஏமாற்றம்

Comments (0)
Add Comment