டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – திரை விமர்சனம்

பகத் பாசில் , குழந்தை சாரா பாலேகர் , மகேஷ் மஞ்ச்ரேக்கர் சவுரப் சச்தேவ், வெங்கடேஷ்நடிப்பில்
ஷஷாங்க் யெலேட்டி இயக்கதில் வெளி வந்திருக்கும் படம்

படம் என்ன சொல்ல வருகிறது

சூரி (பகத் பாசில்) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். ரேஸ் பெட்டிங் கட்டி கடனில் மாட்டிக்கொள்கிறான். பழைய நகரத்து ஸ்மக்ளர் அஸ்லாம் (மகேஷ் மஞ்ச்ரேக்கர்) “3 நாளில் 25 லட்சம் கொடுக்கலைனா காலி” என்று மிரட்டுகிறான்.

பணத்துக்காக தப்பு மேல தப்பு செய்யும் சூரிக்கு ஒரு மேஜிக் லாக்கெட் கிடைக்கிறது. அதில் இருந்து திவ்யா (சாரா) என்ற சின்ன பெண் வருகிறாள். இவள் சாதாரண பெண் இல்லை, சூரிக்கு மட்டும் தெரியும் மேஜிக் பெண். காணாமல் போன தன் அப்பா அம்மாவை கண்டுபிடிக்க உதவுமாறு சூரியிடம் கெஞ்சுகிறாள்.

ஆரம்பத்தில் இவளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் சூரி, பின்பு இவளுடன் ஒரு பயணம் போகிறான். அந்த பயணத்தில் திவ்யா உண்மையில் யார்? அவள் அப்பா அம்மாவுக்கு என்ன ஆனது? என்ற திடுக்கிடும் உண்மை தெரிய வருகிறது.

 

பகத் பாசில் வழக்கம் போல மிரட்டல். கலகலப்பான ஆம்புலன்ஸ் டிரைவராக, பயந்தவனாக, பின்பு திவ்யாவுக்காக உருகுபவனாக என மாறுகிறார். ஆனால் படத்தின் உண்மையான ஹீரோ குழந்தை சாரா தான். பகத் பாசிலுக்கு ஈடு கொடுத்து நடிப்பு, எமோஷன் இரண்டும் கலந்தது.

சுட்டீஸ்களுக்கு பிடிக்கும். கிளைமாக்ஸ் எமோஷன் கொஞ்சம் நெகிழ வைக்கிறது.
காமெடி, எமோஷன், மேஜிக் என்று எதையும் முழுமையாக சொல்லாமல் குழப்பி விட்டார் இயக்குனர்

 

மொத்தத்தில்: டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – பகத் பாசில் & குழந்தை சாராவின் நடிப்பு, விஷுவல் மேஜிக், கிளைமாக்ஸ் எமோஷனுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

ரேட்டிங்: 3/5 குழந்தைகளுடன் பார்க்கலாம்.

Comments (0)
Add Comment