இதுவரை போலீஸ், CBI விசாரணையை தான் சினிமாவில் பார்த்திருப்போம். முதல் முறையாக கஸ்டம்ஸ் துறைக்குள் நடக்கும் கடத்தல் விளையாட்டை படமாக கொண்டு வந்திருக்கிறார் ஒரு நிஜ Iஅதிகாரி
இயக்கம் & தயாரிப்பு, தோ. சமய முரளி (IRS அதிகாரி)
நடிப்பு: சரண் சக்தி, ஷிமோகா, ராதிகா சரத்குமார், ஜே.டி.சக்கரவர்த்தி, லால், பால சரவணன், காளி வெங்கட்
ஹீரோ சரண் வருமானம் இல்லாத இளைஞன். அம்மா ராதிகாவுடன் வாடகை வீட்டில் இருக்கிறான். சொந்த சித்தப்பாவே 50 லட்சம் கொடு இல்லை வீட்டை காலி பண்ணு என மிரட்டுகிறார். இந்த நெருக்கடியில் காளி வெங்கட்டின் தங்கை ஷிமோகாவை காதலித்து கல்யாணமும் செய்து கொள்கிறான்.
பணத்திற்காக என்ன செய்வது என தெரியாமல், கடத்தல் மன்னன் ஜே.டி.சக்கரவர்த்தி – துபாய் பார்ட்னர் லால் கூட்டணியிடம் வேலைக்கு சேர்கிறான். வேலை என்ன தெரியுமா? கஸ்டம்ஸில் உள்ள கண்டெய்னர்களில் இருந்து பொருட்களை கஸ்டம்ஸ் கண்களில் மண்ணை தூவி வெளியே கொண்டு வருவது
இதற்கு தன் நண்பனும் கஸ்டம்ஸில் வேலை பார்க்கும் பால சரவணனையும் பயன்படுத்துகிறான். இது மனைவிக்கு தெரிய வர, அவள் கோபித்து வெளியேறுகிறாள்.
அப்போது தான் என்ட்ரி கொடுக்கிறார் நேர்மையான கஸ்டம்ஸ் அதிகாரி சமய முரளி. அவரது தீவிர விசாரணையில் சரண் மாட்டுவானா? மனைவிக்காக திருந்துவானா? என்பதே மீதி.
படத்தின் மிகப்பெரிய பலமே, இயக்குனர் ஒரு நிஜ IRS அதிகாரி என்பது தான். அதனால் கஸ்டம்ஸ் உள்ளே எப்படி எல்லாம் திருட்டு நடக்கும் என்பதை மிக நம்பகமாக காட்டியிருக்கிறார். நாம் யோசிக்காத பல விஷயங்கள் பகீர் கிளப்புகிறது.
சரண் சக்தி – வறுமையில் இருந்து குற்றத்திற்கு போகும் இளைஞனாக நன்றாக செய்திருக்கிறார். ராதிகா சரத்குமார் அம்மாவாக கச்சிதம். ஷிமோகாவுக்கு நல்ல அறிமுகம்.
ஜே.டி.சக்கரவர்த்தி, லால் இருவரும் பெரிய வில்லன்கள்
சமய முரளி இரண்டாம் பாதியில் வந்த பிறகு தான் படம் விறுவிறுப்பாகிறது. ஆபாசம், கெட்ட வார்த்தை இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் க்ரைம் த்ரில்லராக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
வழக்கமாக சினிமாவில் கடத்தல் சம்பவங்களை பார்த்திருப்போம் ஆனால் இந்த படத்தில் நாம் பார்ப்பது உண்மை சம்பவம் நடந்ததை சினிமாவாக எடுத்திருக்கிறார் இந்த சம்பவம் வழக்கமான கடத்தல் சினிமாவை விட மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது
கஸ்டம்ஸ் துறையின் இன்னொரு பக்கத்தை காட்டும் முயற்சி –