ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்

 

படம் பார்க்கும் ஆண்களை ரசிக்கவும் சிரிக்கவும் மூடு ஏற்றவும் முடிவு பண்ணி வந்திருக்கும் படம் ஸ்வீட்டி நாட்டி கிரேசி. படம் என்ன சொல்ல வருகிறது ?

நாயகன் காதல் வலையில் நாயகி. இருவரும் கட்டிலில் இணைந்த பிறகு காதலன் இதற்கு முன் கணக்கு டீச்சரை கணக்கு பண்ணியதை சொல்ல இருவருக்கும் பிரேக் அப்.

மீண்டும் இணைந்து அதுவும் கட்டிலில் காதல் கைகூட, மீண்டும் காதலன் ஒரு ஆண்ட்tடியை அலப்பறை செய்ததை கூற, இனி இவனை இப்படியே விடக்கூடாது என உடனே காதலி காதலனை மணம் முடிக்கிறார்.

மாலையும் கழுத்துமாக மாமியார் வீட்டுக்கு வரும் நாயகன், நாயகியின் சகோதரியை பார்த்ததும் ஷாக் ஆகிறார், ஏனென்றால் அவர் கணக்கு பண்ணிய கணக்கு டீச்சர் நாயகியின் சகோதரி. நாயகியின் தாயைப் பார்த்ததும் ஹாய்  ஒல்டேஜில் நாயகன் பதற, ஆண்டியை ஏற்கனவே பதம் பார்த்த நினைவுகள் வருகிறது. பிறகு என்ன ? இதுவே ஸ்வீட்டி நாட்டி கிரேசி கதைக்களம். மன்னிக்கவும் சதைக்களம்.

நாயகன் படம் முழுக்க பிளேபாயாக வருகிறார். பெண்களை எப்படி ரூட்டு விடுவது, அவர்களை எப்படி மடக்குவது என்பதை இவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றாக செய்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்தை தப்பாக யாரும் என்ன வேண்டாம், அந்த இந்திரனுக்கு ரம்பா, ஊர்வசி, மேனகா என்றால் நம் நாயகனுக்கு மனைவி, மச்சினி, மாமியார் இவர்கள் மூவரும் தான்.

மகளை மணம் முடித்த பிறகும் மருமகனை உல்லாசத்துக்கு அழைப்பது தமிழ் கலாச்சாரம் அல்ல.. காம கலாச்சாரம். அவர் இப்படி என்றால், மச்சினி அதற்கு மேல் உருண்டு புரளுகிறார் யார் அந்த மச்சினி ? நம்ம பழைய இனியா தான்.  நன்றாக சதை போட்டு கதைக்காக தன் சதையை தெரியப்படுத்துகிறார்.

சரி, மாமியார் யார் என்று பார்த்தால் நம் சுந்தரா ட்ராவல்ஸ் நாயகி ராதா. அவர்தான் நாயகனின் மாமியார்.  இவர்களுடன் சத்யன், தம்பி ராமையா சிறப்பாக செய்திருந்தாலும் இவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை சரியாக செய்யாத காரணத்தால் நாயகனுக்கு அதிர்ஷ்டம் அழைக்கிறது.

இயக்குனர் ஒரு மிகப்பெரிய முடிவோடு தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். படம் அடல்ட் கன்டென்ட் ஆக இருந்தாலும் வசனம் முழுவதுமே அடல்ட் ஆக தான் இருக்கிறது. செல்ஃப் எடுக்குமா எடுக்காதா என்ற வாலிப பெண்களின் தாகத்திற்கு கல்யாணத்திற்கு முன்னால் படுக்கையை பகிர்ந்தால் தான் தெரியும் என்ற உண்மையை நமக்கு சொல்கிறார் இயக்குனர்.

90களில் சரோஜாதேவி என்ற மேட்டர் புத்தகம் மறைமுகமாக கடைகளில் கிடைக்கும். அந்த புத்தகத்தின் கதையை திரைக்கதை வடிவமைத்து சிறப்பாக இயக்கி ஜெயித்தும் இருக்கிறார் இயக்குனர். வாழ்த்துக்கள் படம் முழுக்க காமத்தோடு காமெடியும் கலந்து இருப்பதால் காம நெடி காமெடியில் கொஞ்சம் மறைந்து போகிறது.

 

ஸ்வீட்டி நாட்டி கிரேசி = ஆண்களுக்காக

sweety nauhjty crazy movie reviewஸ்வீட்டி நாட்டி கிரேசி - விமர்சனம்