விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி இசையில் அஜய் திஷான், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பூக்கி .என்ன சொல்ல வருகிறது படம் ? வாருங்கள் பார்ப்போம்.
காதல் காதல் காதல்.. உலகத்தை இயங்க வைத்துக் கொண்டிருப்பது.. ஏங்கவும் வைத்துக் கொண்டிருப்பது.. அந்தக் காதலில் விழுந்த யாரும் தப்பித்ததாக சரித்திரம் சொல்லவில்லை.. ஆனால் அந்த காதலில் ஏற்படும் தடங்கள், அதனால் ஏற்படும் மன உளைச்சல், வேதனை, விரக்தி என்ன என்பதை சொல்ல வருகிறது இந்தப் படம்.
நாயகன் ஆரம்பக் காட்சியில் பயணிக்கும் போது நாயகன் நாயகிக்குள் ஏற்பட்ட சிறு பிரச்சனை பெரிய பிரச்சினையாகி பிரேக்கப்பிற்கு செல்ல அவர்கள் இருவருக்குள் ஏற்படும் மனப்போராட்டங்களை சொல்ல வருகிறது இந்தப் பூக்கி.
நாயகன் அஜய் திஷான் காதல் நாயகனாக வலம் வருகிறார். காதலுக்குள் இருக்கும் சிறு சிறு சந்தோஷங்கள், சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தையும் மிக அழகாக தன் முக பாவங்கள் மூலம் மற்றும் உடல் மொழியாலும் வசன மொழியாலும் மிக அழகாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலியிடம் சண்டை போடுவதில் சரி, அந்த சண்டை நினைத்து வருந்துவதும் சரி, அந்த வருத்தம் தவறு என்று நினைப்பதும் சரி, என அனைத்து உணர்வுகளையும் டூ கே கிட்ஸ் மன பிம்பங்களை மிக அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார்.
நாயகி தனுஷா அறிமுகம் தான். ஆனால் நடிப்பில் பழைய முகம் போல் தெரிகிறது. நாயகனுக்கு ஏற்ற நாயகி. நடிப்பில் நாயகனுக்கு இணையாக தன் பங்களிப்பை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இறுதிக்காட்சியில் கடற்கரையில் பிரேக்கப் சொல்ல வரும் நேரத்தில் மீண்டும் காதல் கைகூடும் தருணம் மிக அழகாக செய்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தாலும் படம் முழுக்க நாயகனும் நாயகியும் மட்டுமே நமக்குத் தெரிகிறார்கள். பாடல் காட்சியில் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி புதிய கெட்டப்பில் தோன்றி நம்மை மகிழ்விக்கிறார்.
இயக்குனர் டு கே கிட்ஸ் மன உளைச்சல் மற்றும் மற்றும் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில் படத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். முதல் காட்சியில் பிரேக்கப்பில் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அந்த சண்டைக்கு காரணம் என்னவென்று கடைசி வரை சொல்லவில்லை. பிரேக்கப் ஆனால் என்னென்ன உணர்வுகள் வரும், என்னென்ன மன உளைச்சல்கள் வரும், என்னென்ன எண்ணங்கள் தோன்றும், அதை எப்படி சமாளிப்பது ? அது எப்படி எதிர்நோக்குவது என்று மட்டுமே இவரின் குறிக்கோளாக இருப்பது படம் பார்க்கும் நமக்கு தெரிகிறது. விஜய் ஆண்டனி கம்பெனி என்ற பெரிய நிறுவனத்தில் படம் இயக்கி அதற்கு இசை விஜய் ஆண்டனி என்ற பலம் மட்டுமே படத்திற்கு இருக்கிறது.
பூக்கி =2K கிட்ஸ்