காளிதாஸ் 2 – விமர்சனம்

 

காளிதாஸ் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து காளிதாஸ் 2 அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வந்திருக்கிறது.  படம் என்ன சொல்ல வருகிறது ? பார்ப்போம் வாருங்கள்..

பல நூறு வீடுகளைக் கொண்ட  அப்பார்ட்மெண்டில் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. அதை கண்டுபிடிக்க வருகிறார் நமது கதாநாயகன் பரத். காணாமல் போன குழந்தை சடலமாக மீட்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இன்னொரு குழந்தையின் சடலமும் கண்டெடுக்கப்படுகிறது. இரு குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் என்ன ? யார் என்பதே படத்தின் மீதி கதை.

காவல் அதிகாரியாக பரத்.. கம்பீரம் நேர்கொண்ட பார்வை.. வீரநடை என ஒரு நிஜ காவல் அதிகாரியை நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார். அவர் உடல் மொழியும் வசன மொழியும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மிக சிறப்பாக தனித்துவமாக தெரிகிறது.

நாயகி பவானி ஸ்ரீ, பரத்திற்கு சரியான சவால் விடும் நடிகையாக இருக்கிறார். இவர்கள் நடிப்பின் போட்டா போட்டி படம் பார்க்கும் ரசிகனை படத்தில் கட்டிப்போட்டு வைத்து விடுகிறது.

அறிமுக நாயகன் அஜய் கார்த்தி, ஜூனியர் வக்கீல்.. சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளி ஆக்கப்படும்போது தன் நடிப்பில் மெருகேற்றி ரசிகனால் ஈர்க்கப்படுகிறார். எதிர்காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய நாயகர்கள் வரிசையில் இவர் இடம் பிடிப்பார் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.

குறைவான காட்சிகள் பிரகாஷ் ராஜ்க்கு.. ஆனாலும் நிறைவாக செய்து இருக்கும் அவருக்கு சிறப்பான பாராட்டுக்கள்.

பூவே உனக்காக சங்கீதாவை நாம் மறக்க முடியாது. சில காலம் கலைத்துறையில் காணாமல் போயிருந்தார். இந்த படம் அவருக்கு மீண்டும் ஒரு வலம் வருவதற்கு ஒரு சிறந்த கதாபாத்திரம்.

படத்தின் துவக்கத்திலிருந்து இயக்குனர் ஸ்ரீ செந்தில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை மிகச்சிறப்பாக காட்சிக்கு காட்சி ரசிகனை ஒரு படபடப்பாகவும் ஒரு டென்ஷனாகவும் வைத்து இருக்கிறார். அதேசமயம் காவல்துறையில் இருக்கும் பிரச்சனைகள், உயரதிகாரி, அவருக்கு அடிபணியும் இணை அதிகாரி  என நாம் கண்டிராத விஷயங்களை நமக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்,

சிறந்த இயக்கம் என்பது எந்த ஒரு  காட்சியிலும்  ரசிகன் பார்வையில் தொய்வு  ஏற்படாமல் திரைக்கதையை  வடிவமைப்பதுதான்  அந்தபணியியை சிறப்பாக  செய்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ செந்தில், அவருக்கு பக்க பலம்  ஒளிப்பதிவும் இசையும்,, தங்கள் பணியை சிறப்பாக செய்து இருப்பதால்..

 

காளிதாஸ் – 2

 

காளிதாஸ்-3யை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது

kalidas 2 movie reviewகாளிதாஸ் 2 - விமர்சனம்