எங்கள் தங்கம் – விமர்சனம்

 

இது சமந்தாவோட கம்பேக் படம். 3 வருஷம் கழிச்சு நடிச்சிருக்காங்க. ‘ஓ பேபி’ படத்துக்கு அப்புறம் இயக்குநர் நந்தினி ரெட்டி, சமந்தா கூட்டணி மறுபடியும்.

தெலுங்குல ‘மா இண்டி பங்காரம்’னு வந்து, தமிழ்ல ‘எங்கள் தங்கம்’னு வந்திருக்கு

கதை என்ன?
சொர்ணா – சமந்தா. காதலிச்சு திருமணம் பண்ணிக்கிறாங்க. ஆனா வீட்டை எதிர்து கல்யாணம் பண்ணதால கணவர் ஹனி-யோட குடும்பம் இவங்களை ஏத்துக்கல. தங்கை கல்யாணத்துக்காக ஊருக்கு போறாங்க. அங்க சொர்ணா அந்த குடும்பத்துல ஒரு ஆளா மாற முயற்சி பண்றாங்க – சமையல், கோலம், வீட்டு வேலைனு எல்லாம் பண்ணி மாமியார், மாமனார் மனசை மெல்ல கரைக்கிறாங்க

இப்படி எல்லாம் சரியா போயிட்டு இருக்கும்போது, சொர்ணாவோட பழைய கடந்த காலம் வந்து முட்டுது. ‘ஜான்சி’னு ஒரு பேர்ல அவங்க ஆபத்தான ஆளுங்களுக்கு எதிரா நின்னவங்க. கருணா – குல்ஷன் தேவய்யா வில்லனா வர்றாரு. சொர்ணா ஜான்சிதானு தேடி ஆளுங்க வர்றாங்க. தன் குடும்பத்தை காப்பாத்த சொர்ணா என்ன பண்றா, பழைய வாழ்கையை விட்டுட்டு புது வாழ்கை வாழ முடியுமானு பாக்குறதுதான் மீதி கதை

படத்தோட பலம்:
1. சமந்தாவோட நடிப்பு: படம் முழுக்க அவங்க தோள்லதான் நிக்குது. முதல் பாதி சாதுவான மருமகளா வந்து குடும்பத்தை கவர்றாங்க. இரண்டாம் பாதி ஆக்ஷன் அவதாரம் எடுத்து அடிக்கிறாங்க. சமையல் பண்ற இடத்துலயும், அடியாட்களை துவம்சம் பண்ற இடத்துலயும் சமா ஸ்கோர் பண்றாங்க. சேலை கட்டிட்டு சண்டை போடுற காட்சிகள் மாஸ் காட்டுது

2. முதல் பாதி: குடும்ப டிராமா, காமெடி, மர்மம் எல்லாம் கலந்து நல்லா போகுது. சமந்தாவும், தோழியா வர்ற மஞ்சுஷாவும் சேர்ந்து பண்ற காமெடி, “கடலை பருப்புக்கும் உளுந்துக்கும் வித்தியாசம் தெரியாது, ஆனா இதெல்லாம் நல்லா தெரியுது”னு கவுண்டர் விடுறது எல்லாம் ரசிக்க வைக்குது. கிராமத்து செட்டிங், உறவுகள் எல்லாம் இயல்பா இருக்கு

3. டெக்னிக்கல்: சந்தோஷ் நாராயணன் இசை படத்துக்கு பெரிய பலம். பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளை தூக்கி விடுது. ‘தஸ்ஸடியா’ பாட்டு நல்லா இருக்கு. ஒளிப்பதிவு, சண்டை கோரியோகிராபி – பஸ் சண்டை, க்ளைமாக்ஸ் சண்டை எல்லாம் நல்லா பண்ணியிருக்காங்க

குறைகள்:
1. இரண்டாம் பாதி: முதல் பாதி மாதிரி வேகம் இல்ல. திரைக்கதை ரொம்ப யூகிக்க முடியுற மாதிரி போகுது. ட்விஸ்ட் எல்லாம் முன்னாடியே தெரிஞ்சுடுது. பெரிய திருப்பம் எதுவும் இல்லாம ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் மோதலா மட்டும் போகுது

2. வில்லன்: கருணா கதாபாத்திரம் பலவீனமா எழுதப்பட்டிருக்கு. பயமுறுத்துற அளவுக்கு இல்ல. அதனால சண்டை காட்சிகளுக்கு அவ்வளவு விறுவிறுப்பு இல்ல. ப்ளாஷ்பேக்கும் பெருசா எதிர்பார்பை பூர்தி பண்ணல

3. பழைய டெம்ப்ளேட்: ‘பாட்ஷா’ பட டெம்ப்ளேட்டை திருப்பி போட்டு லேடி வெர்ஷன் மாதிரி இருக்கு. குடும்பத்தை மையமா வச்ச ஆக்ஷன் படம்தான், புதுசா எதுவும் இல்ல.

முடிவா என்ன சொல்லலாம்?
‘எங்கள் தங்கம்’ புதுசா கதை சொல்லல. ஆனா சமந்தாவுக்காக பாக்கலாம். குடும்பத்தோட போய் என்டர்டெயின் ஆக வர்ற படம். முதல் பாதி ஜாலியா, உணர்வுபூர்வமா இருக்கு. இரண்டாம் பாதி சமந்தாவோட ஆக்ஷன் மட்டும்தான் தாங்கி நிக்குது.

சமந்தா ரசிகர்களுக்கு இது மாஸ் கம்பேக். 3 வருஷம் கழிச்சு வந்து முழு படத்தையும் தன் தோள்ல தாங்குறாங்க. “தங்கத்தை கொண்டாட முடியலைனாலும், தங்கத்தை ஒதுக்கவும் முடியாது இல்லையா”னு ஒரு விமர்சகர் சொல்ற மாதிரி.

எங்கள் தங்கம் - விமர்சனம்
Comments (0)
Add Comment