கஃபுள் பிரண்ட்லி ; விமர்சனம்

 

சந்தோஷ், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கஃபுல் பிரண்ட்லி.. படம் என்ன சொல்ல வருகிறது ?

நாயகன் சந்தோஷ் இன்டீரியர் டெக்கரேஷன் செய்யும் படிப்பு படித்துவிட்டு அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் சொந்த ஊரை விட்டு சென்னை வந்து பைக் டாக்ஸி ஓட்டிக்கொண்டு அப்படியே தன் வேலையை தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் நாயகி மானசாவின் நட்பு கிடைக்கிறது. அவரின் உத்வேக பேச்சால் நாயகனுக்கு வேலைக்கான பல விஷயங்கள் கிடைக்க, தன் தொழிலில் வளர்ந்து வரும் நேரத்தில் நாயகி மானசாவுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் நாயகிக்கு மறதி நோய் ஏற்பட்டு வாழ்வின் நாட்களை எண்ணி கொண்டிருக்கும் விஷயத்தை டாக்டர் சொல்ல பிறகு என்ன நடக்கிறது என்பதை படத்தின் மீதி கதை.

படத்தைப் பொறுத்தவரை ஒரு காதல் கதை என்று தான் நாம் அனைவரின் நினைப்போம். ஆனால் அதையும் மீறி மனிதனின் உள் மனங்கள் ஆத்மார்த்தமான உணர்வுகள் பாசிட்டிவ்வான எனர்ஜியான விஷயங்கள் என இயக்குனர் ஒரு வாழ்வியலை நமக்கு சொல்லி இருக்கிறார்.

நாயகன் எங்கேயோ பார்த்த முகம் போல் இருக்கிறது. படம் முழுக்க இவரின் ஆதிக்கமும் நாயகி மானசாவின் ஆதிக்கமும் தான். ஆனாலும் எந்த ஒரு காட்சியிலும் ஒரு தொய்வு ஒரு அலுப்பு இல்லாமல் தன் நடிப்பாற்றலால் படம்பார்க்கும் ரசிகனை கட்டிப்போட்டு வைத்து விடுகிறார்..

நாயகி மானசா வாரணாசி. இவர் ஒரு இந்திய அழகி. இந்த படத்திற்கு இவர் தான் பேரழகி. இவரை பார்க்கும் அனைவருக்கும் இவருடன் நட்பு பாராட்ட வேண்டும் என்று எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படும். காதல் காட்சியிலும் சரி, கண்ணீர் காட்சியிலும் சரி.. மிகவும் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகனை தன் வசப்படுத்தி இருக்கிறார். காதலுக்கும் காமத்துக்கும் உள்ள இடைவெளியை மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்தியிருக்கிறார். தமிழ் திரை உலகில் மிகப்பெரிய இடத்தை எட்டிப் பிடிப்பார் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.

யோகி பாபு, தன் நகைச்சுவை அலம்பல் கதையை எந்த விதத்திலும் தடை செய்துவிட கூடாது என்ற எண்ணத்தில் அடக்கி வாசித்து இருக்கிறார். சிறப்பு.. மற்ற கதாபாத்திரங்களை பற்றி நாம் சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம். அனைவரும் தங்கள் பங்களிப்பை மெருகேற்றி இருக்கிறார்கள்.

இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர் காதலை இப்படியும் சொல்லலாம் என்று மிகச்சிறப்பாக திரைக்கதை வடிவமைத்து அந்த திரைக்கதைக்கேத்த நடிகர்களை நடிக்க வைத்து ஒரு வெற்றி படமாக இந்த படத்தை தந்திருக்கிறார். உள்ளங்களின் உணர்வுகளை உருக்கமாக காட்டி இருப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் என்பது இந்த படத்தின் மூலம் நமக்கு தெரிகிறது. வாழ்த்துக்கள்.

couple friendly movie reviewகஃபுள் பிரண்ட்லி ; விமர்சனம்