ஏன் என்னை ஏதோ செய்தாய் – விமர்சனம்

 

தமிழில் காதல் படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் காதலை புதிதாக சொல்கிறேன் என்ற பெயரில், பழைய ஒயினை புது பாட்டிலில் ஊற்றி கொடுத்திருக்கிறது இந்த படம்

தாயை இழந்த ஹீரோ, குடிகார அப்பா, பாசத்துக்கு ஏங்கும் மகன் – இது 90-களில் இருந்து நாம் பார்த்து சலித்த கதை. ஆண்டனி என்ற கதாபாத்திரத்தின் வெறுமை”, குடி, நண்பர்களுடன் சுற்றுவது என எல்லாமே ரொம்ப செயற்கையாக இருக்கிறது. இதில் மதுமிதா வந்து காதலிப்பது, பின் சின்ன சண்டையில் பிரிவது என திரைக்கதை நகர்வது மிகவும் மெதுவாக, எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போகிறது

கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, எடிட்டிங் என எல்லாவற்றையும் டி.அந்தோணியே பார்த்திருப்பது தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ். எதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. நடிப்பில் பாசத்துக்கு ஏங்கும் இளைஞனாக நடிக்க முயன்றிருக்கிறார், ஆனால் பல இடங்களில் மிகை நடிப்பாகவே தெரிகிறது. படம் முழுக்க இவர் எத்தனை சிகரெட் குடித்தார் என்று போட்டி வைத்தால் யாரலையும் ஜெயிக்க முடியாது

நாயகி மதுமிதா தாஸ், பெங்கால் மொழி பேசும் நாயகி புதுமுகம் என்றாலும், தமிழ் உச்சரிப்பும், எதார்த்தம் இல்லாத நடிப்பும் படத்தோடு ஒட்டவில்லை. சிரிப்பு, அழகா இருக்கிறது

பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு கொஞ்சம் OK
ஜெய்கர் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் இசை, ஜோயி ரெடா பின்னணி இசை – பரவாயில்லை ரகம்.

பெரும்பாலான காட்சிகள் திருவான்மியூர் பீச்சிலும் வீட்டிலும் எடுக்கபட்டு இருக்கிறது

புதுமுகங்களின் முயற்சி என்பதை தாண்டி, திரைக்கதையில் புதுமை இல்லை. உணர்வுகளை கவித்துவமாக சொல்கிறேன் என்று இழுத்தடித்திருக்கிறார்கள். காதல், நட்பு, பிரிவு என எதுவும் மனதில் நிற்கவில்லை.

ஏன் என்னை ஏதோ செய்தாய் – ?????

Comments (0)
Add Comment