ஒன்ஸ்மோர் – விமர்சனம்

 

காதலை வித்தியாசமாகச் சொல்ல வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அந்த வித்தியாசத்தை ரசிகன் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டும். ‘ஒன்ஸ் மோர்’ அந்த இடத்தில் தான் தடுமாறுகிறது. அர்ஜுன் தாஸ் சோகத்தின் விளிம்பில் வாழ்க்கை நகர்த்தும் நாயகன் அவர் அவர் வாழ்வில் நுழைகிறார் அதிதி காதலை ஏற்க மறுக்கும் நாயகன் பிறகு அதிதியின் உண்மை காதலை ஏற்று திருமணத்திற்கு சம்மதிக்கும் நேரத்தில் நாயகனின் முதல் காதல் முன்னாடி வருகிறது பிறகு நடப்பது என்ன இதுவே ஒன்ஸ்மோர் படத்தின் கதை

ரகுவரன் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ். கரகரக் குரலுக்கு சொந்தக்காரன் காதலுக்கு உருகும் கதாபாத்திரம்படத்தின் ஆரம்பத்தில் வாழ்வதற்கே பிடிக்காத, உயிரற்ற ஒரு மனிதனாக அறிமுகமாகிறார். இவனுக்கு என்ன தான் பிரச்சினை? ஆனால் அந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியும் போது நமக்கு தலை சுற்றுகிறது

அஞ்சலியாக வரும் அதிதி ஷங்கர் தான் எப்போதும் உற்சாகமாக, துள்ளலாக சிரித்த முகத்துடன் சிரித்துக் கொண்டே இருக்கிறார் ஆனால் அதில் உயிர் இல்லை ஒரு செயற்கை தனம் மட்டுமே தெரிகிறது அஞ்சலி சில காட்சிகளில் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் மிகையாகவும் தெரிகிறார்.

அஞ்சலியின் உலகம் கலர்ஃபுல்லாகவும், ரகுவின் உலகம் இருட்டாகவும், இறுக்கமாகவும் காட்டப்படுவது ஒளிப்பதிவின் சிறப்பு அழகு. உடை, லொகேஷன், வண்ணம் மூலம் மனநிலையை சொன்னது இயக்குனரின் நுணுக்கத்தை காட்டுகிறது. குறிப்பாக வடக்கு கேரள பின்னணியில் வரும் இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்து.

ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை படத்தின் பக்க பலம் பார்க்கும் ரசிகனை தாளம் போட வைக்கிறது..

இயக்குனர் சினிமாவை நேசிப்பவர் போல் தெரிகிறது ஒவ்வொரு காட்சிக்கும் பல படங்களின் வசனங்களையும் காட்சிகளையும் சொல்லி நமக்கு புரிய வைக்கிறார்

*மொத்தத்தில் – ‘ஒன்ஸ் மோர்’ ஒரு தடவை பார்க்கலாம் ஒன்ஸ்மோர் கேட்க முடியாது

Comments (0)
Add Comment