சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாகும் நயன்தாரா, தம்பி யாஷுடன் சேர்ந்து திருடி பிழைக்கிறார். இவர்களின் திறமையை பார்த்து ஒரு பெரிய டான் தன் கும்பலில் சேர்த்துக்கொள்கிறார். இதுவரை பரவாயில்லை.
அதன்பிறகு தான் இயக்குனர் கீது மோகன்தாஸ் குழப்ப ஆரம்பிக்கிறார். டான் கும்பலில் சேர்ந்ததும் பெரிய பெரிய கடத்தல், கொள்ளை என படம் KGF-ஐ காப்பி
பெண்கள் என்றாலே பின்னால் சுற்றும் கதாபாத்திரமாக யாஷ். தன்னை வளர்த்த முதலாளியின் மகள் தாரா சுதாரியாவை காதலிப்பார், அவரது அப்பாவும் சம்மதிப்பார். அடுத்த காட்சியிலேயே ஊருக்கு வந்த சர்க்கஸ் பெண் கியாரா அத்வானி மீது மோகம் கொண்டு நெருக்கமாகி கர்ப்பமாக்கி விடுவார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல் என்ற பெயரில் ஆபாசத்தை திணித்திருக்கிறார்கள்.
தாராவுடன் திருமணம் முடிந்த பிறகு தான் யாஷின் உண்மை முகம் தெரிகிறது, கியாரா கர்ப்பம் விஷயம் வெளியே வருகிறது. இதனால் முதலாளிக்கும் யாஷுக்கும் சண்டை. கோபத்தில் தாரா யாஷை துப்பாக்கியால் சுட, நயன்தாரா தாராவை கொன்று விடுகிறார். இறுதியில் நயன்தாராவை கொல்லும் போது படம் எதை நோக்கி போகிறது என்றே புரியவில்லை.
லேடி சூப்பர்ஸ்டார் என்ற பெயருக்காக வைத்தது போல் உள்ளது. மாறுபட்ட கதாபாத்திரம் என்று சொல்லி அவரை ஒரு சாதாரண கதாபாத்திரமாக்கி விட்டார்கள்.
KGF-ல் பார்த்த அதே நடை, அதே உடை, ஆனால் கதையில் ஆழம் இல்லை. கே ஜி ஃபீல் துப்பாக்கியில் சுட்டது போல் சுட்டால் மக்கள் தன்னை கொண்டாடுவார்கள் என்ற எண்ணத்தில் யாஷ் ஒரு தவறான முடிவை இந்த படத்தில் எடுத்திருக்கிறார் ஆக்ஷன் காட்சிகளில் சத்தம் மட்டுமே அதிகம்.
*விஷால் மிஸ்ரா, ரவி பஸ்ரூர் என மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தும், பின்னணி இசை காதை கிழிக்கிறது.
யூகிக்க முடியாத திருப்பம் என்ற பெயரில் லாஜிக் இல்லாமல் எதையோ சொல்லியிருக்கிறார்கள். வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் பார்க்கும் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது காட்சிகள் தேவைக்கு அதிகமாக திணிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு மட்டும் தான் ஒரே ஆறுதல். மற்றபடி இடைவேளைக்கு பிறகு படம் எங்கே போகிறது என்று இயக்குனருக்கே தெரியவில்லை.
டாக்ஸிக்- கொலை மற்றும் ஆபாசம்
ரேட்டிங்-2/5