7 ஸ்டார் பாய்ஸ் ; விமர்சனம்

 

இது வெறும் கால்பந்து படம் இல்ல… ஏழு பொடியன்களோட கனவுக்கான போராட்டம்!

கேரளாவின் ஒரு குக்கிராமம். அங்கே 10 வயசு கூட தாண்டாத 7 பொடியன்கள். அவனுக கால்ல பந்து இருந்தா போதும், உலகத்தையே மறந்துடுவானுக. உள்ளூர் கிரவுண்ட்ல ஜெயிச்சு, பெரிய ஸ்டார் ஆகணும்னு துடிக்கிறானுக.

ஆனா கனவு காணுறவனை இந்த உலகம் சும்மா விடுமா? காசு பிரச்சனை, ஆள் பலம், அரசியல்-னு ஏகப்பட்ட தடை. அந்த தடையை எல்லாம் இந்த 7 பேரும் எப்படி ஓடி, பாஞ்சு உடைக்கிறானுக என்பது தான் டைரக்டர் நிகில் பிரேம் ராஜ் வைத்திருக்கும் ட்விஸ்ட்.

அந்த 7 பேரும் – லுக்மான், பாலு, அமல், தனிஷ் – நடிக்கல… வாழ்ந்திருக்கானுக. அதுவும் தனிஷ் பையன், கண்ணுலயே கோல் அடிக்கிறான்.

அவனுகளுக்கு காட்ஃபாதரா வர்றாரு ஆண்டனி வர்கீஸ். சும்மா தெறிக்க விட்டுருக்காரு. அவன் வந்தா கிரவுண்டே அதிருது.

மொத்த படத்தோட பிரம்மாஸ்திரம் – ஐ.எம்.விஜயன் சார் கோச்சா வர்றாரு. அவர் பந்தை தொட்டாலே கோல் தான். அவரை திரையில் பார்ப்பதே புல்லரிக்க வைக்கிறது.

படத்தோட கிளைமாக்ஸ் மேட்ச் இருக்கே… அதை படம்னு சொல்ல முடியாது. நிஜ மேட்ச் பார்க்கிற மாதிரி இருக்கும். தியேட்டர்ல எல்லாரும் எந்திரிச்சு “கோல்… கோல்”னு கத்துவானுக. ஜேக்ஸ் பிஜாய் BGM-மும், ஃபயஸ் சித்திக் கேமராவும் சேர்ந்து மைதானத்தையே கண் முன்னாடி கொண்டு வருது.

இதற்க்கு நடுவில் ஆண்டனி வர்க்கசின் காதல் நாயகி முகம் கடைசியில் காட்டபடுகிறது இது படத்தின் சைட் டிராக் மெயின் கால்பந்து விளையாட்டுதான்

இது விளையாட்டு படம் மட்டும் இல்ல, நட்பு, கனவு, ஜெயிக்கணும்கிற வெறி பத்தின படம்.

7ஸ்டார் பாய்ஸ்-👍👍👍👍

Comments (0)
Add Comment