அமரம் – திரை விமர்சனம்

ராஜன் தேஜஸ்வர்ஐரா அகர்வால் நடிப்பில் வந்திருக்கும் படம் அமரம் படம் என்ன சொல்ல வருகிறது மேற்கு தொடர்ச்சி மலையை பற்றி நாம் கேட்டிருப்போம் இது கிழக்கு தொடர்ச்சி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வியலில் கூலிக்கு கொலை செய்யும் தொழிலில் ஈடுபடும் நாயகன்

அதே சமயம், தனது அப்பாவை கொன்றவர் தான் ராஜன் என நினைத்து அவரை பழிவாங்க ஐரா அகர்வால் தேடி வருகிறார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்க்காத பல உண்மைகளையும், ஆபத்துகளையும் சந்திக்கிறார். அதன் பின் நடப்பதுதான் மீதிக்கதை.

நாயகனின் காதலும் மற்றும் வீரமும் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறது இந்த படம்

அடர்ந்த தாடி, முரட்டுத்தனமான தோற்றம், பேச்சை விட செயலில் காட்டும் உடல்மொழி என ராஜன் தேஜஸ்வர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியான கூலிப்படை ஆளாக வரும் அவர், போகப்போக ஒரு ஹீரோவாக உருமாறும் இடம் செம மாஸ். குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி படத்திற்கே வேகத்தை கூட்டுகிறது.

பழிவாங்க துடிக்கும் பெண்ணாக ஐரா அகர்வால் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அவருக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் கொடுத்திருந்தால், இன்னும் மனதில் நின்றிருப்பார். மற்றபடி மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ஹரிஷ் பெராடி என அனைவரும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

இயக்குனர் அருள் கிருஷ்ணா ஒரு முக்கியமான விஷயத்தை தொட்டிருக்கிறார். மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி, பண முதலாளிகள் எப்படி அவர்களை கொலைகாரர்களாக மாற்றுகிறார்கள் என்ற மறுபக்கத்தை தைரியமாக காட்டியிருக்கிறார். சமூக கருத்தையும், ஆக்ஷனையும் ஒன்றாக கலந்து சொல்ல முயன்றது பாராட்டுக்குரியது.

மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பரத் குமாரின் ஒளிப்பதிவு மலைப்பகுதியை அழகாகவும், அதே நேரத்தில் மிரட்டலாகவும் காட்டியிருக்கிறது.

வித்தியாசமான கதை, சமூக அக்கறையுடன் கூடிய ஆக்ஷன் என கவனம் ஈர்க்கிறது ‘அமரம்’.

Comments (0)
Add Comment