கிராமத்து மண் வாசனையோடு, காதல், குடும்பம், கல்யாணம், ஜாதி பிரச்சனைகளை ஜாலியாகவும் அழுத்தமாகவும் பேசும் படம்தான் மொதராத்திர
இயக்குநர் ராஜா கருப்புசாமி ஒரு முழு இரவுக்குள் நடக்கும் கதையை எடுத்துக் கொண்டு, என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தை கடைசி வரை தக்க வைத்திருக்கிறார். கிராமத்து மக்களின் பேச்சு, அவங்க கோப தாபங்கள், வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள் எல்லாம் ரொம்ப நேச்சுரலாக காட்டியிருப்பதுதான் படத்தின் பெரிய பிளஸ்.
தென் மாவட்ட கிராமத்தில் ஒரு கல்யாண வீடு. மாப்பிள்ளை வெளிநாட்டிலிருந்து வர வேண்டும். ஆனால் அந்த மாப்பிள்ளை ரிஷிகாந்துக்கே தனக்கு கல்யாணம் என்பது தெரியாது. அவரை எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க குடும்பமே போராடுகிறது.
இங்கே மணப்பெண்ணோ, தான் லவ் பண்ண பையனோடு ஊரை விட்டு ஓட திட்டம் போடுகிறார்.
கல்யாணத்தை வெறுக்கும் மாப்பிள்ளை ஏன் இப்படி இருக்கிறார்? ஓடிப்போக நினைக்கும் பொண்ணு என்ன முடிவு எடுக்கிறார்? இந்த ரெண்டு கேள்விக்கும் ஒரே இரவில் நடக்கும் கலகலப்பான சம்பவங்கள் மூலம் பதில் சொல்கிறது திரைக்கதை.
படத்தின் தலைப்பை பார்த்தால் வேறு மாதிரி தோன்றினாலும், உள்ளே இருப்பது முற்றிலும் வேறு கதை.
ரிஷிகாந்த் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அவரது உடல்மொழி மாறுவது அருமை. சேத்தனுடன் மழையில் வரும் காட்சியில் அவரது நடிப்பு ரொம்ப நல்லா வந்திருக்கு. காமெடி, எமோஷன் இரண்டையும் அழகாக கையாண்டிருக்கிறார்.
அனிஷ்மா அனில் குமார்: இவர் தான் படத்தின் மற்றொரு தூண். காதல், குழப்பம், பதட்டம் என பல உணர்வுகளை அநாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முக்கிய திருப்பங்கள் எல்லாம் இவரை சுற்றிதான் நடக்கிறது.
சேத்தன் தன் பாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக செய்திருக்கிறார்.
சங்கிதா பாலன் சின்னத்திரையில். இவர் ஏற்க்காத கதாபாத்திங்கள் இல்லை இந்த படத்தில் நாயகனின் அம்மாவாக அசத்தியிருக்கிறார் அதுவும் சம்மந்திக்குள் நடக்கும் சண்டையில் இவரின் அனுபவம் தெரிகிறது
வெங்கடேஷ் உட்பட மற்ற அனைவரும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
டெக்னிக்கல் இயக்கம், இசை, ஒளிப்பதிவு*
இயக்குநர் ராஜா கருப்புசாமி பிரம்மாண்டத்தை நம்பாமல், மனிதர்களையும் அவர்களின் பேச்சுகளையும் வைத்தே கதை சொல்லியிருக்கிறார்.காதல் கல்யாணம் ஜாதி ஏழை சாமி பணக்கார சாமி தீண்டாமை என பல விசயங்களை படத்துக்குள் சொல்லமல் சொல்லியிருக்கிறால்
அது மட்டுமல்லமல் சழித்துபோனலும் .சகித்து வாழ்வதுதான் காதல் என்ற வசனம் அருமை
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கின்றன. பின்னணி இசை இன்னும் பலம். சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், இரவு நேர காட்சிகளையும் அழகாக பிடித்துள்ளது.
‘மொதராத்திரி’ – வாழ்வியலின் வெளிச்சம்
*Rating: 4./5