Hi – விமர்சனம்

 

கவின் நயன்தாரா ராதிகா பாக்கியராஜ் பிரபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் Hi
படம் என்ன சொல்ல வருகிறது ? கவினுக்கு பொய் பேச தெரியாது ஒரு வெகுளியான பையன் காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஒரு முடிவோடு இருப்பவன் ஆனால் அவன் காதலை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை மனம் உடைந்த கவின் சென்னைக்கு கிளம்ப அதே நேரம் விருப்பம் இல்லாத திருமணத்தால் சென்னைக்கு வரும் நயன்தாரா பார்த்ததும் காதல் பற்றிக்கொள்ள ஆனால் நயன்தாராவிடம் காதலை சொல்ல கவின் சிரமப்பட எப்படி சொல்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில் இருவரையும் அழைத்துச் சொல்ல அவரவர் பெற்றோர்கள் வர நயன்தாராவை நான் கர்ப்பமாக்கி விட்டேன் என்று கவின் சொல்ல பிறகு நடப்பது என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் Hi

கவின் நடிப்பை நாம் பல படங்களில் பார்த்து ரசித்திருப்போம் ஆனால் இந்த படத்தில் நகைச்சுவை கவின் அலம்பல் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக அழகாக எதார்த்தமாக தான் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் காதலை சொல்ல அவர் படம் பாடு நயன்தாராவை கர்ப்பம் என்று சொல்லிவிட்டு அதற்காக அவர் சிரமப்படும் காட்சிகள் நகைச்சுவை என்றாலும் அது ஒரு மெசேஜையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கவின் எந்த கதாபாத்திரம் இருந்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவதில் திறமையானவர் உள்ளது இந்த படத்தில்

நயன்தாரா தன் இளமையை ரசிகர்களுக்கு எடுத்துக்காட்ட முன்னணி அப்கமிங் கதாநாயகன் மட்டுமல்ல யாராக எனக்கு ஜோடி சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் கவின் உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நமக்கென்னவோ இவர்கள் கெமிஸ்ட்ரி ஹிஸ்டரி ஜியாகிராபி இன்னும் ஏதேதோ இருக்கோ அத்தனையும் ஒர்க்கவுட் ஆகல ஆனா நயன்தாரா வாக தெரிகிறார் கவின் கவினாக தெரிகிறார் திரைக்கதையில் இவர்களின் கெமிஸ்ட்ரி இயக்குனரின் கைவண்ணத்தில் எப்படியோ தப்பித்துக் கொண்டு விட்டது
மறைந்த பாக்கியராஜ் இந்த படத்தில் நாயகனின் தந்தையாக இவரைப் பற்றி நாம் விமர்சிப்பது சரியா என்பது தெரியவில்லை மிகப்பெரிய ஜாம்பு வான் திரைக்கதை வித்தகன் அவர் மறைந்தாலும் அவரின் படம் அவரைப் பற்றி பேச வைக்கிறது நயன்தாரா தந்தையாக பிரபு ஏனோ இந்த கதாபாத்திரம் பிரபுவுக்கு சரியாகப் பொருந்தவில்லை இறுதியில் வரும் அவர் மனைவி கிளைமாக்ஸ் என்பதால் சகித்துக் கொள்ளலாம் பெப்சி விஜயன் காட்சிகள் குறைவு என்றாலும் மிகச்சிறப்பாக தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார் மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை இயல்பாக செய்துள்ளனர் இயக்குனர் தன் திரைக்கதையின் மூலம் படத்தை தூய்வில்லாமல் இறுதிவரை கொண்டு செல்கிறார் வாழ்த்துக்கள்

Hi -ஹாய்

ரேட்டிங் – 3/5

Comments (0)
Add Comment