பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

 

“நல்ல சினிமா என்பது நவீன தொழில்நுட்பத்தில் இல்லை, பார்வையாளனின் மனதில் பதிய வைப்பது சினிமாவில் இன்னும் சொல்லப்படாத ஒரு கோணத்தில், ஒரு மெல்லிய காதல் கதையை எடுத்து, அதை ஓணம் ரிலீஸில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியிருக்கிறார்.இயக்குநர் படம் என்ன சொல்ல வருகிறது ?

பொருளாதார சூழலால் வேறு ஊருக்கு குடிபெயர்ந்த வருத்தத்தில் இருக்கும் கல்லூரி பெண் ஆஷ்லி. அவள் வீட்டின் பக்கத்து வீட்டில், தன் கடந்த கால இழப்பை மனதில் புதைத்துக்கொண்டு கேட்டரிங் தொழில் செய்யும் மத்திய வயது ஆண் ஜஸ்டின். எதிரும் புதிருமான இந்த இருவரும் சந்திக்கும்போது என்ன நடக்கிறது, அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.

ஆஷ்லியாக வரும் *மமிதா பைஜு*வுக்கு இது மிக முக்கியமான படம். வீட்டை, நட்பை இழந்து தவிக்கும் பெண்ணாக, குறும்புக்காரியாக, காதலில் விழுபவளாக என பல பரிமாணங்களை அற்புதமாக செய்திருக்கிறார்.

அவரையும் தாண்டி படத்தை தன் தோளில் தூக்கி நிறுத்தியிருப்பது நிவின் பாலி ஜஸ்டினாக அவரது நடிப்பு பண்பட்ட நடிப்பு. குறிப்பாக ஆண்களின் வெட்கத்தை, இதுவரை சினிமாவில் யாரும் காட்டாத அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக காட்டியிருக்கிறார். வயதான உடல்மொழி, உறைந்து போன உணர்வுகளை மீண்டும் உயிர்ப்பிப்பது என நிவின் மிரட்டியிருக்கிறார்.

தம்பி ஜோயலாக சங்கீத் பிரதாப், நண்பர் பைஜுவாக சுரேஷ் கிருஷ்ணா, மாமா அலெக்சாக வினய் ஃபோர்ட் என அனைவரும் கதைக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.

கிரீஷ் படங்களின் பலமே கதைக்களம் ஒரு சின்ன டவுன், அடுத்தடுத்த வீடுகள், தேவாலயம், தெருக்கள் என நம் பக்கத்து வீட்டில் நடக்கும் கதை போலவே எடுத்திருக்கிறார்.

காதலை பட்டென்று பற்ற வைக்காமல், வசனம் பேசாததை இசை பேசுகிறது. விஷ்ணு விஜய்யின் இசை படத்தின் ஆன்மா. ஆஷ்லியின் கிட்டார் நரம்பும், ஜஸ்டினின் தீப்பெட்டி உரசலும் இணையும் இடத்தில் காதல் பிறக்கிறது.

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவும், ஆகாஷ் வர்கீசின் எடிட்டிங்கும் அமைதியாக படத்தை தாங்குகி

அந்த காதல் காட்சி – ஆஷ்லியை காணாமல் தவித்து, காரில் ஒன்றாக பயணித்து, சண்டையிட்டு, சேரும் அந்த ஒரு காட்சி, காதலின் மனசாட்சி

மொத்தத்தில், படம் ஒரு அழகான, மென்மையான காதல் கவிதை. குடும்பத்தோடு கொண்டாட வேண்டிய படம்.

4 / 5

Comments (0)
Add Comment