அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீண் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஜிகே ரெட்டி, பி..எல். தேனப்பன், வேல.ராமமூர்த்தி, ஓ.ஏ..கே. சுந்தர் மற்றும் பலர் நடிப்பில் வந்திருக்கும் படம் தீயவர் குலைநடுங்க.
எழுத்தாளர் ஜெபநேசன் உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டு நெடுந்தொலைவு பயணத்தை மேற்கொள்ளும்போது எதிர்பாராத விதமாக .விபத்தில் சிக்கி மரணமடைகிறார். இது தொடர்பாக வழக்கு ஒன்றை பதிவு செய்து காவல்துறை விசாரிக்க தொடங்குகிறது.. காவல்துறை அதிகாரியான அர்ஜுன் எழுத்தாளர் மரணம் குறித்த விசாரணையை தொடங்குகிறார்.. விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள், நினைத்துப் பார்க்காத சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அது என்ன ? தெரிந்துகொள்ள பாருங்கள். தீயவர் குலை நடுங்க..
காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் வழக்கம் போல் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். ஆனால் படம் முழுக்க காவல் உடை அணியாத அதிகாரி உயர் அதிகாரி முன்பும் காவல் உடை அணியாமல் விவாதிக்கும் அதிகாரி காரணம் இயக்குனருக்கே வெளிச்சம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் நாயகி. இவரே நாயகனும். இவரே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி தரும் ஆசிரியை. நடிப்பு மட்டுமல்ல, சண்டைக் காட்சிகளும் சிறப்பு மிகச்சிறப்பு.
அபிராமி வெங்கடாசலம் மாற்று திறனாளி மகளை பெற்றெடுத்த தாயின் தவிப்பை இவரின் கண்கள் பல பக்க விசனங்களை பேசுகின்றன. இவருக்கு வசனங்கள் தேவையில்லை. கண்களே போதும். பல வித பாவங்களையும் பலவித உணர்ச்சிகளையும் தன் கண்கள் முலமே அழகாக வெளிப்படுத்துகிறார்.
ராம்குமார், சிவாஜி கணேசனின் மகன் பல படங்களில் நடிப்பை பார்த்திருக்கிறோம். அதில் மாற்றம் இல்லாமல் இந்த படத்திலும் வழங்கி இருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த மனநலம் குன்றிய சிறுமியின் பாலியல் வன்கொடுமையை தினசரியில் பார்த்திருப்போம். அதை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு திரைக்கதையை சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் அமைத்து படம் முழுக்க ஓர் எதிர்பார்ப்பை படம் பார்க்கும் ரசிகனுக்கு உருவாக்கி சிறப்பாக இயக்கி இருக்கும் இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணனுக்கு நமது focusoncinema சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தீயவர் குலை நடுங்க — தீயவர் கொலை நடுங்க