I Nobody – திரை விமர்சனம்

கூட்டத்தில் தொலைந்த ஒருவனின் குரல்

மலையாள சினிமா எப்போதும் சாதாரண மனிதர்களின் அசாதாரண கதைகளை சொல்லி பழகியிருக்கிறது. அந்த வரிசையில் இயக்குநர் நிஸாம் பஷீர் கொடுத்திருக்கும் புதிய படைப்புதான் ‘I, Nobody’. ‘என்னு நிண்டே மொய்தீன்’ பிறகு 10 வருடங்கள் கழித்து பிருத்விராஜ் – பார்வதி மீண்டும் இணைந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்பு

இது ஒரு பெரிய ஹீரோவின் கதை அல்ல. பெயர் கூட சரியாக யாருக்கும் தெரியாத ராஜீவனின் கதை. அரசு அலுவலகத்தில் கோப்புகளை நகர்த்தும் சாதாரண ஊழியன். மனைவி மீரா, இரண்டு பெண் குழந்தைகள். கடன், EMI, பள்ளி கட்டணம் என நடுத்தர வர்கத்தின் அன்றாட பிரச்னைகளுடன் ஓடும் வாழ்க்கை.

ஒரு நாள், எதேச்சையாக ஒரு வங்கி கொள்ளையை பார்துவிடுகிறான். அவ்வளவுதான். அடுத்த நிமிடம் முதல் அவனே கொள்ளைக்காரனாக மாற்றப்படுகிறான். YouTube சிசிடிவி, மீடியா, போலீஸ், அரசியல் என அனைத்து அமைப்புகளும் ஒரு ‘Nobody’ மீது விரல் நீட்டுகின்றன.

தன் குடும்பத்தை காப்பாற்றவும், தன் நிரபராதித்தனத்தை நிரூபிக்கவும் ராஜீவன் எடுக்கும் முடிவுகளும், அவனுக்குள் உறங்கிக் கிடந்த தைரியம் விழித்தெழும் விதமும் தான் படம்.

பிருத்விராஜ் இந்தப் படத்தை தன் தோளில் சுமக்கிறார். ராஜீவன் என்ற கதாபாத்திரத்திற்கு அவர் கொடுத்திருக்கும் உயிர் அபாரம். ஆரம்பத்தில் பயந்து, குழம்பி, பின் கோபத்தில் வெடிக்கும் ஒரு சாதாரணனை அவர் நம் பிருத்விராஜ் இல்லை. வியர்வை வாசனையுடன், கண்களில் கலக்கத்துடன் வாழும் நம்மில் ஒருவன்.

பார்வதிமீராவாக வந்து படத்தின் உணர்வுப்பூர்வமான ஆதாரமாக நிற்கிறார். கணவன் மீது வைத்த நம்பிக்கை உடையும் போதும், குழந்தைகளுக்காக தைரியமாக முடிவெடுக்கும் போதும் அவரது நடிப்பு நம்மை தொடுகிறது. இரண்டு குழந்தைகளும், குறிப்பாக சிறிய பெண், தன் இயல்பான நடிப்பால் பல காட்சிகளை திருடிவிடுகிறார்கள்.

ஹக்கீம் ஷாஜஹான், அசோகன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

‘கெட்டியோளானு என்டே மலாகா’வில் குடும்ப வன்முறையை பேசிய நிஸாம் பஷீர், இந்த முறை ‘அமைப்பு’ என்கிற பெரிய அரக்கனை பேசுகிறார். ஒரு சாதாரண மனிதன் தவறாக முத்திரை குத்தப்பட்டால், அவனை சமூகமும் மீடியாவும் எப்படி கொன்றுவிடும் என்பதை த்ரில்லர் வடிவில் சொல்லியிருக்கிறார்.

படத்தின் முதல் பாதி நேர்தியான சஸ்பென்ஸ் திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் நம்மை அடுத்து என்ன நடக்கும் என யோசிக்க வைக்கிறது. இடைவேளை காட்சி இந்த வருடத்தின் சிறந்த திருப்பங்களில் ஒன்று

காட்சிகளின் வழியே மீடியாவின் பொறுப்பின்மையையும், சமூக அவமானத்தின் கொடூரத்தையும் பதிவு செய்திருக்கிறார்

தினேஷ் புருஷோத்தமனின் கேமரா படத்திற்கு ஹாலிவுட் படம் பார்கும் ஃபீலை தருகிறது.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை ஒவ்வொரு பதற்றமான தருணத்தையும் இன்னும் கூர்மையாக்குகிறது.

யதார்தமான சண்டைக்காட்சிகள். லிப்ட் சண்டை இன்னும் பல நாட்களுக்கு பேசப்படும்.

“நான் யாருமில்லை”என ஒதுங்கி நிற்கும் ஒவ்வொரு சாதாரணனுக்குள்ளும் ஒரு ‘Somebody’ இருக்கிறான் என்பதை இது நினைவுபடுத்துகிறது.

சமூகத்தை யோசிக்க வைக்கும் முயற்சி.

நிஸாம் பஷீர் மீண்டும் நிரூபித்திருக்கிறார் –

Nobody – யாருமில்லை என ஒதுக்கப்பட்டவனின் மிகப்பெரிய குரல்.*

Comments (0)
Add Comment