அன்பே டயனா – விமர்சனம்

இயக்கம் , கதை, நடிப்பு பாரி இளவழகன்

நடிகர்கள் ; பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி

இசை: பரத் சங்கர்

தயாரிப்பு Million Dollar Studios

பெரம்பூர்ல வசிக்கிற சிருமாமில்லா சீதா கிருஷ்ணா – பாரி இளவழகன். தெலுங்கு குடும்பத்து பையன். குழந்தைகளுக்கு தடகள பயிற்சி கொடுக்குறவர்.

பள்ளிப் பருவத்துல இருந்தே மேஜிக் டயானா டி’சோசா – ரம்யா ரங்கநாதன் மேல ஒருதலை காதல். ஆங்கிலோ இந்தியன் பொண்ணு. அப்போ கிருஷ்ணா காதல சொன்னா, “காதல் வேண்டாம், நாம பிரண்ட்ஸ்”னு சொல்லிடுறா.

வருஷங்கள் கழிச்சு மறுபடி சந்திப்பு. இந்த தடவ காதல் துளிர்விடுது.

ஆனா இங்கதான் பிரச்னை. கிருஷ்ணாவோட அம்மா – ரோஜா. சுயசாதிப்பற்று அதிகம், ரொம்ப கண்டிப்பானவங்க. “தெலுங்கு பையனுக்கு தெலுங்கு பொண்ணு தான்”னு பிடிவாதம்.

ஒரு பக்கம் கலாச்சார வித்தியாசம், இன்னொரு பக்கம் குடும்ப எதிர்ப்பு. இந்த குழப்பத்துல காதல் ஜெயிக்குமா?னு காதல் + காமெடி + ஃபேமிலி எமோஷன் கலந்து சொல்லிருக்காரு இயக்குநர் பாரி.

பாரி இளவழகன் ‘ஜமா’க்கு அப்புறம் ஹீரோவாவும் இயக்குநராவும். கிருஷ்ணாவா ரொம்ப இயல்பா இருக்காரு. பெரம்பூர் பையனோட லோக்கல் பாடி லாங்குவேஜ், பேச்சு எல்லாம் பக்காவா வருது. ‘பெரம்பூர் கானா’ பாடல்ல டான்ஸ்லயும் கலக்கியிருக்காரு.

ரம்யா ரங்கநாதன்மேஜிக்கா ஸ்டைலாவும், க்யூட்டாவும் வந்திருக்காங்க. கலாச்சார வித்தியாசத்தோட டயலாக் டெலிவரி நல்லா இருக்கு.

ரோஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுநீள கதாபாத்திரம். சரளாவா வந்து காமெடி + கண்டிப்பு ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிருக்காங்க. அவங்க ரியாக்ஷன் காட்சிகள் தியேட்டர்ல சிரிப்பலை.

சேத்தன், கோபி, செல் முருகன் போன்றோர் பெரம்பூர் மக்கள கண் முன்னாடி நிறுத்துறாங்க.

பெரம்பூரோட மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை ரொம்ப உயிரோட்டமா காட்டியிருக்காங்க. ‘பெரம்பூர் கானா’ பாடலே அந்த ஏரியாவோட ரிதத்த கொண்டு வந்துடுது.

நம்ம வாழ்கைக்கு நெருக்கமான என்டர்டெய்னர். கலாச்சார மோதலை காயப்படுத்தாம, சிரிச்சு சிரிச்சு சொல்லிருக்காங்க. பெரம்பூர் கானா’ பாடல் ரிப்பீட் மோட்ல கேக்க வைக்குது.

பாரி இளவழகன் ‘ஜமா’ மாதிரி கனமான படத்துக்கு அப்புறம் ஒரு ‘சேஃபான’ குடும்ப படம் பண்ணியிருக்காரு. “காதல் கூட இப்போ கால்குலேட் பண்ணி பண்றாங்க”ங்கிற காலத்துல, ஒரு எளிமையான காதல் கதைய சொல்ல வந்திருக்காரு.

அன்பே டயானா ; ஜாலியான படம்.

Comments (0)
Add Comment