ஒரு சினிமா படம் எடுப்பது எப்படி, அதற்கான கதாபாத்திரங்கள் உருவாக்குவது எப்படி, அதற்கான திரைக்கதைகள் வடிவமைப்பது எப்படி என்பதை ஒரு புதிய இயக்குனர் புதிய பாணியில் சொல்லி இருக்கும் படம் தான் தடை அதை உடை.
கதை ஒன்றில் ஜாதிப்பிரச்சனை.. கீழ் ஜாதிக்காரன் குழந்தை ஆடு மேய்க்க வேண்டும், பள்ளிக்கூடம் போகக்கூடாது.. பள்ளிக்கூடத்தில் தன் மகனை சேர்க்க கஷ்டப்படும் தந்தை.. இறுதியில் தந்தைக்கு மரணம் மகனுக்கு பட்டப்படிப்பு.
அடுத்து யூட்யூப் மோகத்தில் சீரழியும் சிலரின் வாழ்க்கை. அதே யூட்யூப் மூலம் கயவர்களை அடையாளம் காட்டும் முயற்சி. யூடியூபில் கமெண்டின் மூலம் ஏற்படும் பிரச்சனை.. இப்படி ஒரு கதை. இவை அனைத்தும் மூன்று நண்பர்கள் படமெடுக்கும் ஆசையில் குறும்படமாக எடுத்து தயாரிப்பாளரிடம் காட்ட இறுதியில் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கிறது என்பதே படத்தின் கதை.
முதல் கதை தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் அவர் சினிமா படத்தின் விதிமுறைகளை கூற, அடுத்த முயற்சிக்கு தயாராகும் நண்பர்கள் அவர்கள் படம் எடுப்பதை படமாக காட்டாமல் கேமராவை காட்டாமல் கதைக்குள் கதையாக அதை முன் வைத்து, ஒரே நடிகரை பலவித கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி இறுதியில் அந்த கதாபாத்திரங்களை வரவைத்து, அவர்களுக்குள் வேறு ஒரு கதாபாத்திரம் இருப்பதை நமக்கு காட்டி நம்மையும் குழப்பி அவர்களும் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் நமக்கு தெரிய வருகிறது.
அங்காடித்தெரு மகேஷ் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நண்பர்கள் மூவரின் நடிப்பு சிறப்பு. ஆனால் இவர்கள் படம் எடுக்கிறார்களா அல்லது அதற்குள் இவர்கள் வாழ்கிறார்களா ? அந்த வாழ்வியலை நமக்கு படமாக காட்டுகிறார்களா ? அதற்குள் இவர்களும் நடித்திருக்கிறார்களா என்று ஏகப்பட்ட கேள்விகள் நமக்கு இருக்கிறது. தடை அதை உடை என்பதை எதை சொல்ல வருகிறார்கள் என்பது நமக்கு புரியவில்லை.
தடை அதை உடை – புரியாத புதிர்
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கியுள்ள ” தடை அதை உடை ”
கதையின் நாயகர்கள் :
அங்காடி தெரு மகேஷ் ( சிவன் ) திருக்குறள் குணா பாபு – (சதீஷ் ),
K.M.பாரிவள்ளல் ( கம்பன்), திருவாரூர் கணேஷ் (கார்த்திக்), மஹாதீர் முகமது ( வினோத்).
மற்றும் இவர்களுடன்
நாகராஜ், டெல்டா சரவணன்,
ஆம்பல் சதீஷ், M.K.ராதாகிருஷ்ணன்( சிலுக்கு மணி),
வேல்முருகன் ( தலைமை ஆசிரியர்), காத்து கருப்பு கலை,
பாக்கியம் கௌதமி,
சுபாஶ்ரீ( தேவி),
சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு – தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் செய்துள்ளார்கள்.
பாடல்கள் – அறிவழகன்
இசை – சாய் சுந்தர்
படத்தொகுப்பு – டாய்சி
கலை இயக்கம் – சிவகுமார்,மணி
சண்டை பயிற்சி – அசோக் குமார்
தயாரிப்பு மேற்பார்வை -வேல்முருகன்
நிர்வாக தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரித்து, கதை, திரைக்கதை வசனம், எழுதி இயக்கியுள்ளார். பட்டுக்கோட்டையை சேர்ந்த அறிமுக இயக்குனர் அறிவழகன் முருகேசன்.