சாத்தான் வழிபாடு, நரபலி போன்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த ஹாரர்-திரில்லர் படம், ஆரம்பத்திலிருந்தே மர்மமும் அச்சமும் நிறைந்த சூழலை உருவாக்குகிறது. கிராமத்தில் நடைபெறும் மர்மமான மரணங்களும், நாயகி வீட்டில் நிகழும் விசித்திர சம்பவங்களும் கதையை சுவாரஸ்யமாக முன்னேற்றுகின்றன..
நாயகன் எஃப்.ஜெ மற்றும் நாயகி ஐரா தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர். மோன பத்ரே, பயமுறுத்தும் அம்மா வேடத்தில் சிறப்பாக திகழ்கிறார்.. கிளைமாக்ஸில் சாந்தினி தமிழரசன் வருகை கதைக்கு முக்கிய திருப்பமாக அமைகிறது.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், சில இடங்களில் அதிக சத்தம் தொந்தரவு அளிக்கிறது.. மேலும், திரைக்கதை தெளிவில்லாமல் இருப்பதால் பல காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக முதல் பாதி முழுவதும் தெளிவின்மை அதிகமாக உள்ளது..
இறுதியில் கிளைமாக்ஸ் சில விஷயங்களை விளக்கினாலும், முழு விளக்கம் இரண்டாம் பாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில்: பயமுறுத்தும் காட்சிகளும் நல்ல நடிப்பும் இருந்தாலும், குழப்பமான திரைக்கதை காரணமாக முழு திருப்தியை தராத ஹாரர் படம்.