தனுஷ்,, மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, பிருத்வி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘கர’ படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்.
பல பேருக்கு “கர” என்றால் என்ன அர்த்தம் என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு கர சாமி அதாவது அவர்கள் குலதெய்வம் அந்தப் பெயரின் சுருக்கமே” கர ”
கொள்ளையடிப்பதை தொழிலாக வைத்துக் கொண்டிருக்கும் தனுஷ் எம்எல்ஏ வீட்டில் கொள்ளை அடித்து விட்டு திருட்டை விடலாம் என்று முடிவு செய்யும்போது போலீசில் மாட்டிக்கொண்டு தப்பிக்க ஆந்திராவில் ஒரு மெஸ்ஸில் வேலை செய்து கொண்டிருக்கும் தனுஷம் அவர் மனைவியும் சொந்தமாக மெஸ் ஆரம்பிக்க, பேங்கில் சுயூரிட்டி கேட்கும்போது ராமநாதபுரத்தில் உள்ள தன் தந்தையின் நிலத்தை அடமானம் வைக்கலாம் என்று எண்ணத்தில் ராமநாதபுரத்திற்கு வருகிறார்.
அங்கு அந்த நிலம் டிராக்டர் வாங்கியதற்காக பேங்க் அடமானத்தில் இருக்க தவணைத் தொகை கட்டாத காரணத்தினால் நிலம் ஜப்தி செய்யப்பட துக்கத்தில் ரவிக்குமார் இறக்க, சடலத்தை அவர் இடத்தில் அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் தனுஷ்
நிலம் எந்த பேங்கில் அடமானம் வைக்கப்பட்டதோ அந்த பேங்கை கொள்ளை அடித்து நிலத்தை மீட்க போராடுகிறார் தனுஷ். நிலத்தை மீட்டாரா ? தந்தையின் உடலை அடக்கம் செய்தாரா என்பதே மீதிக்கதை
தனுஷின் நடிப்பை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. நடிப்பு அரக்கன், நடிப்பு அசுரன் இன்னும் நடிப்பில் என்னென்ன இருக்கிறதோ அத்தனையும் சொந்தம் கொண்டாடலாம் தனுஷ். அந்த அளவிற்கு பண்பட்ட் நடிப்பில் திரையில் மிளிர்கிறார். காட்சிக்கு காட்சி படம் முழுக்க தனுஷின் ராஜ்யமே மேலோங்கி இருக்கிறது. படத்தின் மொத்த சுமையும் தன் முதுகில் சுமந்து படத்தின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருக்கிறார் தனுஷ். எந்த ஒரு இடத்திலும் மிகைப்படுத்தாத எதார்த்தமான நடிப்பில் தன் அடுத்த வீட்டு மனிதனாக தெரிகிறார். இந்த வருடத்தின் தேசிய விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்படுவது உறுதி.
நாயகி மமிதா பைஜூஅழகான நடிப்பு, அழகான சிரிப்பு, தேவையான கோபம், கொஞ்சும் பாசம் என நானும் நடிப்பில் சளைத்தவள் இல்லை என்று போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். இவரை இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு ஒப்பனையிலும் நடிப்பிலும் ஒரு புதிய கே.எஸ் ரவிக்குமாரை இந்த படத்தில் நாம் காணலாம்.
சுராஜ் வெஞ்சாரமூடு.. இவர் நடிக்கிறாரா அல்லது அந்த கதாபாத்திரமாக மாறிவிடுகிறாரா என்கிற ஒரு சந்தேகம் நமக்கு வருகிறது. அந்த அளவுக்கு பாத்திரத்தில் ஒன்றி அந்த கதாபாத்தி.ரமாகவே மாறிவிடும் சுராஜுக்கு இணை இவரே தான்.
அடுத்து நம்ம ஜெயராம். அண்ணனுக்கு வயசானாலும் அந்த சிரிப்பும் துள்ளல் நடிப்பும் அவரை விட்டு இன்னும் போகவில்லை. இவரின் வசன மொழியின் ஏற்ற இறக்கம் இவருக்கு மட்டுமே சொந்தம்.எரியும் வீட்டில் நீரோ புல்லாங்குழல் வாசித்திருப்பதை நாம் கேட்டு இருப்போம். அந்த நீரோவாக நமக்கு தெரிகிறார் இந்த ஜெயராம்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா ஏற்கனவே போர்க்களம் வெற்றிபடத்தின் மூலம் நாம் அனைவராலும் அறியப்பட்டவர். “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற பழமொழியை
கருவாக எடுத்துக் கொண்டு அதற்கு பரபரப்பான ஒரு திரை கதையை உருவாக்கி படம் பார்க்கும் ரசிகனை சீட்டு நுனிக்கு வர வைத்து விடுகிறார். இந்திய மக்கள் 70 சதவீத பேர் அனுபவிக்கும் கஷ்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார்.
வங்கிகள் எப்படி ஒரு சாதாரண மனிதனை ஏமாற்றி கடன் கொடுத்து அதைக் கட்ட முடியாமல் தவிக்கும் போது அவர்கள் இடங்களை அபகரிப்பது என வங்கிகளின் வண்டவாளத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.
ஒரு கருத்துள்ள படத்தை இந்தளவுக்கு விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் மிக சிறப்பாக மக்களுக்கு தர முடியும் என்றால் அது இயக்குனர் விக்னேஷ் ராஜாவால் மட்டுமே முடியும் மறுபடியும் நிரூபித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
ரேட்டிங் 4/5