விது, ப்ரீத்தி,அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், பிரேம் மற்றும் பலர் நடிப்பில் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 29.
படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்..
விவசாய கல்வி பயின்ற நாயகன் வறண்ட பூமியில் விவசாயி செய்ய முடியாமல் ஐடி கம்பெனிக்கு வேலைக்கு வருகிறான். அங்கு உடன் வேலை செய்ய வருகிறாள் நாயகி.
இருவருக்கும் காதல். காதல் என்றால் சிறு சிறு மோதல் இருக்கும். அந்த மோதலின் விளைவு பிரிவு.
பிரிவின் காரணம் என்ன?
முடிவில் இருவரும் சேர்ந்தார்களா? அதற்கு காரணம் என்ன ? பதில் சொல்ல வருகிறது 29
நாயனாக விது தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தாலும் அந்த உருவம் அந்த பாத்திரத்திற்குள் நுழைவதற்கு மிகவும் சிரமப்பட்டாற்போல் தெரிகிறது. ஆனால் நடிப்பில் சிறப்பு பண்பட்ட நடிகன் போல் மிகச் சிறப்பாக அனைத்து காட்சிகளையும் சிறப்பு இருக்கிறார்
நாயகி பிரீத்தி அஸ்ராணி அழகு ராணி. நடிப்பில் சிறந்த ராணி. உயரத்தில் நாயகனை விட குறைந்த ராணி. இருவரையும் காதலன் காதலியாக ஏற்றுக் கொள்ள நம் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அது ஏனோ என்று நமக்கு சொல்லவும் தெரியவில்லை.
மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு சிறப்பு செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்..
நிலா மலர் ஒளி என்று நீ என்னை வர்ணித்தாலும் நான் ஒரு பெண்தான் என்கிறாள் நாயகி. சிங்கம் சிறுத்தை என்று உன்னை வர்ணித்தாலும் நீ ஒரு ஆண் தான், நமக்குள் இருக்கும் உறவு உடலுறவு முடிந்தவுடன் அவ்வளவுதான் இதுதான் வாழ்க்கையா ? இல்லை .? நாம் ஏன் பிறந்தோம் எதற்காக பிறந்தோம் நம்மின் அடையாளம் என்ன மக்களுக்கு நாம் யாராக தெரிகிறோம் என்பதை வாழ்க்கை.
இந்த கருவை வைத்துக்கொண்டு இயக்குனர் ரத்தினகுமார் காதலை காதல் இல்லை என்று சொல்லாமல் காதல்தான் என்று சொல்லாமல் ஒரு முக்கோணத்தில் மேற்கூறிய வசனத்தால் பூசி மொழுகுகிறார். தன் அடையாளத்தை தேடும் நாயகன் தனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்காததால் காதலை ஒரு அடையாளம் ஆக்க முயற்சிக்க அது அடையாளம் இல்லை அது வாழ்வின் ஒரு அங்கம் மட்டுமே என்று கூறும் நாயகி பிறகு ஏன் நாயகனை காதலிக்கிறாள் என்பது புரியவில்லை
உணர்வுகளையும் லட்சியங்களையும் பிரித்துப் பார்க்காமல் இரண்டையும் ஒன்றுக்குள் ஒன்று பிணைத்து காதலர்கள் அவர்களும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்கள். படத்திற்கு 29 என்பதற்கு பதில் அடையாளம் என்று பெயரிட்டு இருக்கலாம்.
கதையின் கோணமே என்னவென்று புரியாமல் திரைக்கதையை எப்படி புனைவது என்று தடுமாறி சில இடங்களில் பிரம்மாண்டத்தைக் காட்டி நம்மை காட்சிக்குள் கட்டிப்போட்டு வைத்து விடலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். அதனால் படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதி காட்சி வரை எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்கிறது.
பல இடங்களில் லாஜிக் மீறல். டெல்லியில் இருக்கும் கதாநாயகியின்ன் தாய் சேலம் மருத்துவமனையில் இருக்கும் நாயகனை பார்க்க கோவிலுக்கு போயிட்டு வருகிறேன் என்று மகளிடம் சொல்லிட்டு வருவது எப்படி ?
29 வயதுக்குள் உன் அடையாளம் எது என்பதை நாம் காட்டி விட வேண்டும் என்பதே படத்தின் கரு.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து இந்த படத்தை தந்திருக்கிறார்கள்
29-அடையாளம்
ரேட்டிங்-2 1/2 – 5