மார்கள் – விமர்சனம்

 

படத்தின் துவக்கத்தில் சென்னையில் காதலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டு காதலியை வீட்டின் அருகே இறக்கி விட்டு செல்லும் காதலன். நாயகி நடந்து வரும்போது பின்பக்கத்தில் வந்து ஒரு மர்ம நபர் அவர் முதுகில் இன்ஜெக்ஷனை செலுத்த உடல் முழுக்க கருமை நிறமாக மாறி அந்த பெண் இறக்கிறாள்.

இதே போல் பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்யப்பட்ட நபர் விஜய் ஆண்டனியின் தங்கை. அது மட்டும் இல்லாமல் விஜய் ஆண்டனியும் அந்த பாதிப்பில் இருந்து பாதி தப்பித்து விடுகிறார்.

இதனால் சென்னையில் நடந்த கொலையை விசாரிக்க சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. கொலை ஏன் நடக்கிறது ? எப்படி நடக்கிறது ? எதற்காக நடக்கிறது என்பதை அவர் கண்டுபிடிக்கும் போது பல அதிர்ச்சிகள் படம் பார்க்கும் நபருக்கு ஏற்படுகிறது. அது என்ன ? பாருங்கள் மார்கன்

நீச்சல் வீரர் தமிழறிவு எனும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகும் நடிகர் அஜய் திஷான் – தொடக்கத்தில் தடுமாறினாலும்… காட்சிகள் நகர நகர இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை ஆக்கிரமிக்கிறார்.

காவல்துறை அதிகாரி துருவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் அண்டனி முகத்தில் கருப்பு வண்ணத்தை பூசிக்கொண்டு அசால்டாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெறுகிறார்.

தோற்ற பொலிவு குறித்த பெண்களின் மூடநம்பிக்கையை மையப்படுத்திய இப்படத்தின் மூலக் கதையை நேர்த்தியாக சொல்லியிருந்தாலும் … ‘தாராவி தார்’ போன்ற சொல்லாடல்களை தவிர்த்து இருக்கலாம். ஏனெனில் இதுவும் ஒரு வகையினதான உருவ கேலியே.

இரண்டாம் பாதியில் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் விறுவிறுப்பும்.. உச்சகட்ட காட்சியில் அடுத்து அடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தரும் சுவராசியமும் முதல் பாதியில் இல்லாதது குறைதான்.

விஜய் அண்டனி, அஜய் திஷான் ஆகிய இருவரையும் கடந்து வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை கனிமொழியின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை திரைக்கதையில் ஏற்படும் சில தொய்வுகளை கூட பார்வையாளர்கள் மறந்து கதையோடு பயணிக்க வைக்கும் அளவுக்கு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.. ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா கிரைம் திரில்லர் பாணிக்கு ஏற்ப பணித்திருக்கிறது.

படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி. ஆனால் உண்மையான கதாநாயகன் அறிமுக நாயகன் அஜய் டிசன். இவரின் அதீத ஞாபக சக்தியால் தான் கொலைக்கான காரணங்கள் மற்ற விஷயங்கள் தெரிய வருகிறது. இதன் மூலம் தான் விஜய் ஆண்டனி கொலையாளியை கண்டுபிடிக்கிறார். படத்தில் விஜய் ஆண்டனியின் உருவம் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக முகத்தில் முப்பது சதவீதம் கருமை மற்றும் ஒரு கை கருமை. அப்படியானதற்கு காரணம் படத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் நமக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும் இறுதிக்காட்சி பட்டென்று முடிந்தது போல் இருக்கிறது. கொஞ்சம் விவரித்து இருக்கலாம்.

margan movie reviewமார்கள் - விமர்சனம்
Comments (0)
Add Comment