டார்க் – விமர்சனம்

 

அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ருன், நட்டி நட்ராஜ், கே.பாக்யராஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர்.

நாயகன் அஜய் கார்த்தியின் வாழ்க்கையில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள், வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள், இருட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து என கதை நகர்கிறது. இது வெறும் பேய் வீடு கதை இல்லை. மனித மனதின் இருண்ட பக்கங்கள், கடந்த கால ரகசியங்கள், உளவியல் சிக்கல்கள் என பல அடுக்குகளை படம் பேசுகிறது. க்ளைமாக்ஸில் வரும் திருப்பம் யாரும் எதிர்பார்க்காதது.

‘டார்க்’ . காட்சிக்கு காட்சி பதற்றத்தை கூட்டிக்கொண்டே போகிறது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சத்தத்தை வைத்து பயமுறுத்தாமல், மௌனத்தை வைத்தே மிரட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒரு இனம்புரியாத அச்சம் ஒட்டிக்கொள்கிறது. இறுதிக் காட்சி வரை சஸ்பென்ஸ் உடையாமல் கொண்டு சென்றது பெரிய ப்ளஸ்.

அஜய் கார்த்தி குழப்பம், பயம், கோபம் என பல உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் மொத்த பாரத்தையும் தோளில் சுமக்கிறார். அஞ்சனா நேத்ருன் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். நட்டி நட்ராஜ் அனுபவ நடிப்பால் காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறார். கே.பாக்யராஜ் வரும் காட்சிகள் கதைக்கு முக்கிய திருப்பத்தை தருகின்றன.

ரவி சக்தியின் ஒளிப்பதிவு படத்தின் மூடை சரியாக பிடித்திருக்கிறது. இருள், நிழல், வெளிச்சம் என விளையாடி ஒரு பயமூட்டும் உலகத்தை உருவாக்கியிருக்கிறார். மனு ரமேசனின் பின்னணி இசை படத்தின் இன்னொரு ஹீரோ. தேவையில்லாத இடத்தில் இரைச்சல் இல்லாமல், பதற்றமான இடங்களில் இதயத் துடிப்பை எகிற வைக்கிறார். கதிரேஷ் அழகேசனின் எடிட்டிங் ஷார்ப். 1 மணி 50 நிமிட படம் எங்கும் தொய்வில்லாமல் போகிறது.  சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், த்ரில்லர் ஜானருக்காக அதை மன்னிக்கலாம்.

‘டார்க்’ என்பது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இல்லை. ஆனால் திகில், சைக்காலஜிக்கல் த்ரில்லர் விரும்பிகளுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

படத்தின் ஃப்ளாஷ் பேக் யாரோட கண்ணோட்டத்தில் நடக்கிறது என்பது சில இடங்களில் புரியவில்ல படத்தில் பேய் ஒரு பக்கம் என்றால் மனிதனின் இல்யூஷன் ஆழ்மனது அதுவும் படத்தின் ஒரு கதாபாத்திரமாக நகர்கிறது ஆனால் குழப்பங்கள் இறுதியில் நமக்கு புரியவில்லை எதை நோக்கி கதை நகர்கிறது இறுதிக்காட்சியில் ஒரு சஸ்பென்சை உடைக்கும் போது அதில் லாஜிக் மீறல் ஏராளம்

பாக்யராஜின் மறைவுக்குப் பிறகு வந்திருக்கும் படம் முதல் காட்சியிலே அவர் மரணம் அடைந்ததாக காட்டப்படுகிறது ஒரு மனிதனின் தற்செயலான நிகழ்வு எப்படி படத்திலும் தற்செயலாக வருகிறது என்பது இறைவனின் செயல்

ரேட்டிங் – 1/5–5

dark movie reviewடார்க் - விமர்சனம்
Comments (0)
Add Comment