நிவின் பாலி, சூரி, அஞ்சலி, ராகுல் சங்கரண், லிஜோமோல் ஜோஸ்நடிப்பில்
ராம் இயக்கத்தில் யுவன் சங்கர்ராஜா இசையில் வந்து
இருக்கும் படம்
படம் என்ன சொல்ல வருகிறது
நிவின் பாலிக்கு பெயரே இல்லை. அவன் 8000 ஆண்டுகளாக சாகாவரம் பெற்று வாழ்பவன். 8822 வயது என்று அவனே சொல்கிறான். ஒவ்வொரு யுகத்திலும் தன் காதலி அஞ்சலியை தேடி அலைகிறான். ஒரு எலியை தனது உயிர் போல நேசிக்கிறான்
மறுபக்கம் சூரி – பல வருடம் வெளியூரில் உழைத்துவிட்டு சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பும் சாதாரண தொழிலாளி. மனைவி, பிள்ளையை பார்க்கும் ஆவல்.
இந்த இரண்டு பேரும் ஒரு ஓடும் ரயிலில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். சாகாவரம் பெற்றவனிடம் சிக்கிக்கொள்ளும் சாதாரண மனிதன் – இவர்களுக்கு நடுவே அந்த எலி. இவர்களுக்குள் நடக்கும் உரையாடலே படம்
கடைசியில் நிவின் தன் காதலியை கண்டுபிடித்தானா? சூரி வீடு போய் சேர்ந்தானா? அந்த எலிக்கு என்ன ஆனது? என்பதே மீதி.
யுவன் இசை தான் படத்தின் உயிர். ஏழு கடல் ஏழு மலை பாடல் மயக்குகிறது. என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு – ரயில், காடு, இயற்கை காட்சிகள்
ராம் வழக்கம் போல “இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை, ஒவ்வொரு உயிருக்கும் சொந்தம்” என்ற அன்பை பேசுகிறார். மனிதன் – விலங்கு – இயற்கை பற்றிய தத்துவம் நன்றாக உள்ளது.
நிவின் பாலி வித்தியாசமான முயற்சி, சூரி தன் பங்கை சரியாக செய்துள்ளார்.
முதல் பாதி முழுக்க ரயிலிலேயே நகர்கிறது, மிக மெதுவாக. சூரி தொடர்ந்து மன்றாடி சூரிய பார்த்து நமக்கு இந்த சூரி புதிதாக உள்ளார் .
அஞ்சலி அழகாக இருக்கிறார் நிவின் பாலிக்கு அஞ்சலையுடன் காட்சி குறைவு எலியுடன் காட்சி அதிகம்
ஏழு கடல் ஏழு மலை – ராம் ரசிகர்களுக்கும், உலக சினிமா ரசிகர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் மிகவும் பிடிக்கும்
ஏழு கடல் ஏழுமலை- இது புத்திசாலிகளின் படம்
ரேட்டிங்- அவரவர் விருப்பம்