யெல்லோ –  விமர்சனம்

 

பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர். நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யெல்லோ. படம் என்ன சொல்ல வருகிறது ? பார்ப்போம்.

கல்லூரியில் பயிலும் காதலர் இருவரின் எண்ணம் தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று, வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்று, உயர்தரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதாக இருக்கிறது. இதற்கு முதலில் சம்மதம் தெரிவிக்கும் நாயகி- எதிர்பாராத விதமாக அவருடைய தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படுவதால் வேறு வழி இன்றி குடும்பத்தை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

இதனால் இவருக்கும் காதலனுக்கும் முரண்பாடு உண்டாகிறது. நாயகியை கை கழுவி விட்டு, வேறொரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி தன் நண்பர்களை சந்திக்க புறப்படுகிறார். பிறகு நடப்பது என்ன ? இதுவே   யெல்லோ.

யெல்லோ என்றால் வானவில்லில் ஒரு நிறம். இதுவே தலைப்பிற்கான காரணம்.

சந்திக்க சென்ற நாயகி தன் தோழியின் மூலம் சில புதிய இடங்களை, சில புதிய மனிதர்களை, சில புதிய விஷயங்களை கண்டு தன் மனதை ஒருநிலைப்படுத்தி துக்க சம்பவங்களை மறந்து, மனம் நிறைந்த சந்தோஷங்களை பெறுகிறார்.

யூடியூப் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் திரை ரசிகர்களிடத்தில் பிரபலமானவரும், ‘ட்ராமா’ எனும் படத்தின் மூலம் நடிகையாகவும் ஜொலித்த நடிகை பூர்ணிமா கதையின் நாயகியாக சிறப்பாக நடித்திருந்தாலும் ஏதோ ஒன்று அவரிடம் குறைவது போல் நமக்கு தெரிகிறது. அது நடிப்பா அல்லது அழகா இல்லை எதார்த்தமான உணர்வா எது என்பது நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பைக் லோன் கட்ட முடியாமல் அந்த பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பும் நாயகன், அவர்கள் இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி உண்டாக அவருடன் பயணம்.

பயணத்தில் சந்திக்கும் லீலா சாம்சன் கதாபாத்திரம் தத்துவங்களை தாராளமாக எடுத்துச் சொல்லும் ஒரு பாத்திரம். அதன் மூலம் நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். மற்ற கதாபாத்திரங்கள் சிறப்பு செய்தாலும் இயக்குனர் தென் மாவட்டங்களையும் கேரளா மாநிலத்தையும் இந்த படத்தின் மூலம் சுற்றுலாவாக சென்று நமக்கு சுற்றி காண்பிக்கிறார்.

திரைக்கதையில் வலுவான காட்சி அமைப்புகள் இல்லை என்பது நமது கருத்து. ஒரு பயணத்தின் மூலம் சில விஷயங்களை மறக்கலாம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்ற விஷயத்தை நமக்கு சொல்லித் தருகிறார் இயக்குனர்.

யெல்லோ – வெளிர்  மஞ்கள்

yellow movie reviewயெல்லோ -  விமர்சனம்