சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா, ரவீனா டாண்டன் நடிப்பில்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
சஞ்சய் விஸ்வநாத் @ சூர்யா. பெரிய பிசினஸ்மேன். கோடி கோடியா சம்பாதிச்சாலும் வீட்ல ஒரு குறை. அம்மா ராதிகாவுக்கு பேரன் வேணும்.
“கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”னு சொல்லிட்டு, வாடகை தாய் மூலமா குழந்தைய கொண்டு வர்றாரு. ஆனா விதி வேற மாதிரி விளையாடுது. குழந்தைய காப்பாத்த பெத்த தாய் மமீதா வீட்டுக்குள்ள வர்றாங்க.
20 வயசு வித்தியாசம், Status வித்தியாசம்… இதையெல்லாம் தாண்டி மலர்ற காதல் தான் படம். இது
சூர்யா
கோட்டு சூட்டுல நடக்கும் போதே Screen ஜொலிக்குது. “கஜினி சஞ்சய் ராமசாமிக்கு” அடுத்து இன்னொரு Iconic கேரக்டர். அம்மா கூட சென்டிமென்ட் scene-ல கண்ணு கலங்க வைக்கிறாரு. 2 Action scene-ல தியேட்டரே அதிருது. அதுவும் டிவி தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு பார்க்கும் ரசிகனை சொந்தத்தை நினைவுபடுத்துகிறது
மமீதா பைஜூ –
வந்து சூர்யாவையே ஆட்டி வைக்கிறாங்க. Comedy-ல சிரிக்க வைக்கிறாங்க. காதல் சொல்லும் போது உருக வைக்கிறாங்க. இந்த படம் மமீதாவுக்கு பெரிய Break.
அம்மா சென்டிமென்ட்
ராதிகா-சூர்யா combination. ஸ்வீட் கேட்டு அடம் பிடிக்கிற காட்சி… அதுக்கு அப்புறம் வர்ற twist… கண்டிப்பா கண்ணு ஈரமாகும்.
வெங்கி அட்லூரி
வாத்தி பட இயக்குநர். இந்த முறை Mass இல்ல, Class. பணக்கார கதைனாலும் நம்ம வீட்டு கதை மாதிரி சொல்லிருக்காரு. திரைக்கதை சுளீர்னு போகுது.
GV + நிமிஷ்
ஜி.வி.பிரகாஷ் பாட்டு காதுல ஒட்டிக்குது. நிமிஷ் ரவி ஒவ்வொரு shot-ஐயும் Postcard மாதிரி எடுத்திருக்காரு. படம் பூரா பளபளப்பு.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்* என்பது ஒரு காதல் கதை மட்டுமில்ல.
இது “அம்மாவுக்காக ஒரு மகன்”, “குழந்தைக்காக ஒரு தாய்”, “காதலுக்காக ஒரு பெண்” பண்ணும் போராட்டம்.
சிரிப்பு இருக்கு, அழுகை இருக்கு, Action இருக்கு, Emotion இருக்கு.
வார விடுமுறைக்கு குடும்பத்தோட போய் பார்க வேண்டிய
இது உங்க படம்! போய் கொண்டாடுங்க!
—
ரேட்டிங்-4/5