வட்டக்கானல் – விமர்சனம்

பாடகர் மனோவின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் வட்டக்கானல்.

கொடைக்கானலில் ஒரு குறிப்பிட்ட இடம்தான் வட்டக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் மலை  பிரதேசம் பார்ப்பதற்கு அழகாகவும் ரசிப்பதற்கு இனிமையாக இருக்கும் இடத்தில் போதைக்காளன் அதிகமாக விளைகிறது அந்த காளானுக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது …அதை வட்டக்கானல் பகுதியில் தாதாவாக இருக்கும் ஆர்கே சுரேஷ், தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அங்கு ஒரு மிகப்பெரிய இடத்தில் காளான்கள் அதிகமாக விளையும் இடம்.. அது கதாநாயகியின் கையில் இருக்கிறது.. அதை கைப்பற்றும்  முயற்சியில் ஆர் கே சுரேஷ் ஈடுபட இறுதியில் என்ன ஆகிறது என்பதே படத்தின் கதை.

துருவ் படத்தின் நாயகன் பார்ப்பதற்கு மிக அழகாகவும் வசீகர பார்வையால் ரசிகனை வசியம் செய்யும் நாயகனாக தெரிகிறார். ஆர்.கே சுரேஷின் மகன்களாக வரும் துருவ் மற்றும் இருவரும் அனாதை ஆசிரமத்தில் இருந்து கூட்டி வந்து வளர்க்கும் ஆர்கே சுரேஷ். இவருக்காக எதையும் செய்யும் துருவ் முதலில் அடிதடி மன்னன் ஆக, குடிகாரனாக வரும் துருல் காதல் வயப்பட்டவுடன் நடிப்பில் ஒரு மாற்றத்தை காட்டுகிறார். இவர் “ஜிம்”முக்கு சென்றால் “ஜம்”மென்று தமிழ் திரையில் ஜொலிப்பார் என்பது நமது கருத்து.

ஆர்.கே சுரேஷ்.. படத்தின் வில்லன் இவர்தான்.. பணத்திற்காக தனது முதலாளியை கொலை செய்து தான் முதலாளி ஆகி விடுகிறார். இவரின் கரகரப்பான குரலும் முரட்டு முகமும் அந்த கதாபாத்திரத்திற்கு மிக அருமையாக பொருந்துகிறது. மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பது நமது நம்பிக்கை.

அவரை கொலை செய்ய காத்திருக்கும் வித்யா பிரதீப் இறுதியில் தனது முயற்சியில் வெற்றி காண்கிறார்.

நாயகி மீனாட்சி வாய் பேச முடியாத ஊமை மிக அருமையாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனை காதலிப்பதும் சரி அதேசமயம் தன் தந்தையின் காரை மீண்டும் வாங்க அவர் முயற்சி செய்வதும் சரி தந்தையும் தாயும் சென்று வந்த இடத்திற்கு தான் சென்று இறந்து போன தந்தையின் தாயிடம் இருப்பது போல் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி மிக அருமையாக தன் நடிப்பாற்றலை வழங்கி இருக்கிறார்.

மற்றும் ஆடுகளம் நரேன் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.. போதை என்ற கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அதற்குள் காதல், நில அபகரிப்பு, வஞ்சகம், இயலாமை, சூழ்ச்சி, மிரட்சி என பலவித உணர்வுகளை திரைக்கதையில் சேர்த்து படத்தை இயக்கியிருக்கிறார், ஆனாலும் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்,, அது எது என்பது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்,

வட்டக்கானல் – போதையின் உச்சம்

vattakkaanal movie review