இயக்குனர் வ. கௌதமன் நடித்து இயக்கி இருக்கும் படம் படையாண்ட மாவீரா. படம் என்ன சொல்ல வருகிறது ?
அரியலூர் மாவட்டத்தில் தனி ராஜாங்கம் நடத்தி வந்த காடுவெட்டி குரு என்ற நபரின் வாழ்க்கை வரலாறு படையாண்ட மாவீரா.
அரியலூர் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குருவின் தந்தை ஒரு சமூகப் போராளி. அவரை சொந்தக்கரர் கயவனே கொலை செய்து விட சிறுவனாக இருக்கும் குரு வளர்ந்து பெரியவனாகி விடலைப் பருவத்தில் அந்த கயவனை தலை வெட்டி கொலை செய்து விடுகிறார். சாட்சிகள் இல்லாத காரணத்தால் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார். பிறகு என்ன ? அந்த ஊரே காடுவெட்டி குருவை காவல் தெய்வம் போல் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் அவரின் கொட்டத்தை அடக்க சென்னையில் இருந்து ஒரு காவல்துறை அதிகாரி காடுவெட்டிக்கு வருகிறார். பிறகு நடப்பது என்ன ? இதுவே படையாண்ட மாவீரா.
இயக்குனர் வ..கௌதமன் காடுவெட்டி குருவாக நடித்திருக்கிறார். இல்லை.. இல்லை.. வாழ்ந்தே இருக்கிறார். அவரின் உருவ சாயல் நடை பாவனை அனைத்தும் நாம் மீண்டும் விஜயகாந்தை பார்ப்பது போல் உள்ளது. வசன உச்சரிப்பும் அப்படியே ஒத்துப்போகிறது. பொங்கி எழும் கோபமும் சரி.. வீறுகொண்டு பேசும் அரசியலும் சரி.. போராட்டத்தில் ஒரு போராளியாக தன் நடிப்பில் பலவித பரிமாணங்களை பிரதிபலித்திருக்கிறார்.
மணல் கொள்ளை, சிமெண்ட் தொழிற்சாலை, அனல் மின் நிலையம் என மக்களை சீர்குலைக்கும் திட்டங்களை எதிர்த்து இவர் நடத்தும் போராட்டங்கள் அரியலூர் மக்கள் அறிந்து இருந்தாலும் இந்த படையாண்டா மாவீரன் மூலம் நமக்கும் தெரிய வருகிறது,
முன்னாள் அரசியல் தலைவி நடு இரவில் ஒரு லாரி நிறைய பணத்தைக் கொண்டு வந்து எடுத்துக் கொள் என்று சொல்லும்போது அதை துச்சமாக மதித்து திரும்பி போ என்று சொல்லும் காட்டு வெட்டி குருவின் நேர்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது,
பல நூறு கோடி வேண்டாம் என்று சொல்லும் மனம் நிச்சயமாக சாதாரண மனிதனுக்கு வராது. அந்த விஷயத்தில் காடுவெட்டி குரு ஒரு மகான் ஆக கண்களில் தெரிகிறார்.
ஒரு சமூகத்தை சார்ந்த மக்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் தமிழன் என்று அனைவரையும் முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி மக்களின் பிரிவினையை ஒழித்து அனைவரையும் ஒன்று சேர்ப்பதில் ஒரு சிறந்த சமூகப் போராளியாக நம் கண் முன் தெரிகிறார்.
அதேசமயம் தன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ செலவுக்கு சில கோடிகள் தேவைப்படும் போது அவரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்கள் பணத்தைக் கொண்டு வந்து தருகிறோம் என்று கூற, வேண்டாம் என்று சொல்லி மறுத்து ஒரு சிறந்த தலைவனாக திகழ்கிறார்.
அரசியலில் போட்டியிட மறுத்து, சந்தன கடத்தல் வீரப்பனின் ஆலோசனை ஏற்று தன் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக சட்டசபையில் இவரின் குரல் மற்றவர்களுக்கு பயத்தை கிளப்புகிறது.
இவரை ஒழிக்க இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என நாம் நினைக்கும் நபர் இவரை கொலை செய்ய முற்பட அதிலிருந்து தப்பித்து அவர்கள் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். உண்மையை சொல்லப் போனால் இவர் இல்லை என்றால் அரியலூர் மாவட்டம் இந்நேரம் மக்கள் வாழ தகுதி இல்லாத ஒரு வறண்ட பாலைவனமாக மாறி இருக்கும் என்பது படத்தின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
படத்தில் வ.கௌதமன் நடிப்பு மிகச்சிறப்பு .அதற்கேற்ற போல் ஒரு திரைக்கதை ஆசிரியராக, இயக்குனராக படம் பார்க்கும் மக்கள் எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து விடாமல் இருக்க திரைக்கதையை சிறப்பாக்கி, இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தும் இருக்கிறார்.
ஒருவரின் வாழ்க்கை வரலாறை எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல.. பெரிய விஷயம். அந்த விஷயத்தில் வ கௌதமன் ஒரு இயக்குனராகவும் ஒரு நடிகராகவும் படையாண்ட மாவீரா படத்தில் ஜெயித்திருக்கிறார்.
focusone cinema சார்பாக நமது வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்