உலகமே திரும்பி பார்த கோவைக்காரர் ஜி.டி.நாயுடு. ஆனா அவரோட கதைய சொல்ல யாரும் வரல. அந்த வெற்றிடத்தை இப்போ இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார நிரப்பியிருக்கிறார்.
இது வெறும் வெற்றிக் கதை இல்ல. ஒரு கனவு எப்படி அமைப்பால் நசுக்கப்படுது, ஒரு மேதை எப்படி சொந்த மண்ணிலேயே அந்நியமாகிறார் என்பதற்கான ஆவணம்.
கதை
கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் இளமை துடிப்பில் இருந்து, இறுதிகால வலி வரை பயணிக்கிறது படம். ஜெர்மனி போய் ஹிட்லரை சந்திக்கிற காட்சி முதல், யு.எம்.எஸ் பஸ் ஓடுற காட்சி வரை அந்த காலத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு அதற்கு பெரிய பலம். ஆனால் வரித்துறை பிரச்சனைகள் ஒரே மாதிரி மீண்டும் வருவதால் இரண்டாம் பாதியில் வேகம் கொஞ்சம் தடுமாறுகிறது.
படத்தின் முதுகெலும்பு
ஆர்.மாதவன் இது அவரோட கேரியரில் திருப்புமுனை. இளம் நாயுடுவின் ஆர்வம், வயதான நாயுடுவின் வைராக்கியம் இரண்டையும் உடல்மொழியிலேயே காட்டுகிறார். இனி ஜி.டி.நாயுடு என்றால் மாதவன் முகம் தான் கண்முன் வரும்.
ஜெயராம்அம்பலவானா கிருஷ்ணன் ரோலில் அமைதியான வில்லத்தனம். கத்தாமல், கூப்பாடு போடாமல் சட்டத்தின் பெயரால் கொடுமை செய்யும் அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
சத்யராஜ் :நண்பராக வந்து அவர் பாணியில் வசனம் நக்கல் நையாண்ட என நண்பனுக்கு தோள் கொடுக்கிறார். அனுபவம் பேசுகிற நடிப்பு.
துஷாரா, பிரியாமணி உட்பட மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை நேர்தியாக செய்திருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை சத்தம் போடாமல் கதையோடு கரைந்து போகிறது. கலை, ஆடை, தயாரிப்பு வடிவமைப்பு எல்லாமே 1940-களின் கோவையை கண்முன் நிறுத்துகிறது.
இயக்குநர் சாதனைகளை மட்டும் கொண்டாடவில்லை. அரசியல், அதிகாரம், பொறாமை என்ற மூன்று சுவர்களுக்குள் ஒரு விஞ்ஞானி எப்படி சிக்கினார் என்பதையும் தைரியமாக பேசுகிறார். க்ளைமாக்ஸ் சில இடங்களில் விவாதத்தை கிளப்பினாலும், கொள்கையில் பிடிவாதமாக இருந்த ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை நம்மை நெகிழ வைக்கிறது.
‘ஜி.டி.என்’ – பார்க வேண்டிய படம்.
ஏனென்றால் இது நாயுடுவின் கதை மட்டுமல்ல, இந்த நாட்டில் கனவு காண்பவர்கள் அனைவரின் கதையும் கூட.
ரேட்டிங் 3/5