மார்க் ; விமர்சனம்

 

கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம், தீப்ஷிகா,  ரோஷினி மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் மார்க். படம் என்ன சொல்ல வருகிறது ?

கிச்சா சுதீப் சஸ்பென்டில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. அதேசமயம் போதைப் பொருளுக்கான ரா மெட்டிரியலை ஒரு போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்திருக்கின்றனர். அங்கு வரும் வில்லன் கூட்டத்தை தொம்சம் செய்கிறார் கிச்சா சுதீப். இது ஒரு புறம் இருக்க 18 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அந்த குழந்தைகளில் ஒருவர் கிச்சா சுதீப் தாயுடன் சென்றவர். அவர்களை காப்பாற்றும் பொறுப்பு கிச்சாவுக்கு.

இன்னொரு புறம் முதலமைச்சர் மருத்துவமனையில் இருக்கும்போது அவர் மகனே அவரை கொலை செய்து முதலமைச்சராக முயற்சிக்க, அதை வீடியோ எடுத்த டாக்டர் அந்த செல்போனை அவர் மகன் எடுக்க அந்த குழந்தையும் கடத்தப்பட அந்த வீடியோ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கிச்சா சுதீப்பிடம் கேட்க குழந்தைகளை காப்பாற்றுகிறாரா கிச்சா சுதீப் ? அந்த வீடியோ உள்ள செல்போனை மீட்கிறாரா என்பதே மீதி கதை.

தாடி, நீண்ட தலை முடி/ இதுவே கிச்சா சுதீப்பின் கெட்டப். போலீஸ் அதிகாரி இப்படி இருக்கக் கூடாது அல்லவா ? அதனால் சஸ்பெண்ட் என்ற ஆயுதத்தை வைத்து ஆனாலும் சஸ்பெண்டிலும் கடமை தவறாத அதிகாரியாக வருகிறார் கிச்சா சுதீப். ஆக்சன் காட்சிகள் முதல் பாடல் காட்சி வரை பட்டையை கிளப்பி இருக்கிறார் கிச்சா. கன்னடத்து பாஷாவாக படத்தில் டைட்டில் நடனத்தில் இவர் அடிக்கும் ஸ்டண்ட் தியேட்டர் விசில் பறக்கிறது.

ஒரு மிகப்பெரிய. பான் இந்தியா ஆக்சன் ஹீரோவாக இந்தப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கு தன்னை தெரியப்படுத்தி இருக்கிறார் கிச்சா சுதீப். குற்றவாளிகளை இவர் தேடும் ஸ்டைல் தனி ஸ்டைல். கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளிவந்திருக்கும் இந்த மார்க் அனைத்து மொழிகளிலும் கிச்சாவுக்கு ரசிக்கப்பட்டாளம் ஏராளம் என்பது படம் பார்க்கும்போது புரிகிறது.

இயக்குனர் விஜய கார்த்திகேயன் சிறந்த திரைக்கதை ஆசிரியராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் மிகப்பெரிய ரவுடி கூட்டம். ரவுடியின் தம்பிக்கு ஒரு காதல். தம்பியை மந்திரி மகளுக்கு மணமுடிக்க ஏற்படும் செய்யும் அண்ணன். அண்ணனிடம் தப்பித்த தம்பி.. குழந்தைகளை கடத்தி பணம் சம்பாதித்து காதலியை கரம் பிடிக்க நினைக்கும் தம்பி.. முதலமைச்சராக துடிக்கும் முதலமைச்சரின் மகன், போதைப் பொருளை கைப்பற்ற நினைக்கும் ஒரு கூட்டம்.. குழந்தைகளை காப்பாற்ற போராடும் கதாநாயகன்.. இப்படி பல கிளைக் கதைகளை ஒரே நேர்கோட்டில் திரைக்கதை வடிவமைத்து அதை காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நகர்த்தி படம் பார்க்கும் ரசிகன் இதயத்தை ஒரு படபடப்போடு வைத்திருக்கிறார் இயக்குனர்.

இத்தனை கதைகளையும் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக படம் பார்ப்பவர்கள் புரியும் வண்ணம் அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயன். அவருக்கு நமது வாழ்த்துக்கள். மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருந்தாலும் நம் அனைவரின் கவனமும் கிச்சா சுதீப் மேலே இருக்கிறது. அந்த அளவுக்கு நாயகனின் அந்தஸ்தை உச்சத்தில் வைத்து கதையை நகர்த்திருக்கிறார் நமது இயக்குனர். அவருக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளரும் இசை அமைப்பாளரும் இணைந்ததால் படத்தின் வெற்றி ஒரு மிகப்பெரிய வெற்றி என்பது அசைக்க முடியாத உண்மையாகி விட்டது.

 

 மார்க்— இது பாஸ் மார்க்

mark movie reviewமார்க் ; விமர்சனம்