மண்டாடி ; விமர்சனம்

 

சூரி சத்யராஜ் சுகாஸ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் மண்டாடி படம் என்ன சொல்ல வருகிறது கடல் சார்ந்த படம் என்றால் ஒன்று வெட்டு குத்து அல்லது மீன் வியாபாரம் கடல் சார்ந்த காதல் இப்படி தான் நான் பார்த்திருப்போம் ஆனால் இயக்குனர் ஒரு புதிய கோணத்தில் கதையை சொல்லி இருக்கிறார்

ராமநாதபுரம் கடலோர கிராமத்தின் அடையாளமே அந்த பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி தான். அதில் குரு சத்யராஜிடம் சூரியும், சுகாசும் சிஷ்யர்களாக வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஏற்படும் மனக்கசப்பால் சூரி எல்லாவற்றையும் உதறிவிட்டு சென்னைக்கு சென்று விடுகிறார்.

பல வருடங்கள் கழித்து, தன் பழைய காதலியின் மகனை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் மீண்டும் ராமநாதபுரத்துக்கு வருகிறார். அங்கு அவர் வெறுத்து ஒதுக்கிய அதே பாய்மரப் போட்டியில், தன் உயிர் நண்பன் சுகாசையே எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல். இறுதியில் ஜெயித்தது யார்?

நாயகனாக தொடர்ந்து வெற்றி கொடுத்தவரும் முந்தைய படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி இருந்தாலும் இந்தப் படத்தில்
ஆக்ஷன் ஹீரோவுக்கு சவால் விடும் வகையில் மிரட்டியிருக்கிறார். கடலில் அவர் செய்யும் சாகசங்களும், போட்டிக்காக அவர் எடுக்கும் பயிற்சிகளும் படத்தின் உயிர். காதலியிடம் மன்னிப்பு கேட்கும் இடத்தில் ஒரு குணசித்திர நாயகனை கண் முன் கொண்டு வருகிறார்

சுகாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ் மண்ணுக்கு ஏற்ற நடிப்பை கொடுத்து எதிர்மறை பாத்திரத்தில் அசத்துகிறார்.

சத்யராஜின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிகனை ஆரவாரப் படுத்துகிறது

பாலசரவணன், துபாய் ரிட்டன் நகைச்சுவை ரசிகனை சிரிக்க வைக்கிறது

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு ராமநாதபுரம் கடலையும், பாய்மர போட்டியையும் கண்முன் நிறுத்துகிறது. இவரின் உழைப்பு திரையில் பார்க்கும் அனைவருக்கும் புரியும்

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படகு போட்டி காட்சிகளுக்கு வேகம் கூட்டுகிறது.

தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத பாய்மர போட்டி என்ற புதிய களத்தை தைரியமாக கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி.

கிளைமாக்ஸ் பாய்மர போட்டியிலும் படத்தை உச்சத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்.

மண்டாடி – மண் மணம் மாறாத கடலின் ஆர்ப்பரிப்பு
[6:46 pm, 10/9/2026] Husen Boy: படத்தின் முக்கியமான ஹீரோ யார் என்றால் ஸ்டென்மாஸ்டர்கள் மிகவும் அருமை ஒரு ஹாலிவுட் தரத்தில் சண்டை பயிற்சியை நமக்குத் தந்திருக்கிறார்கள்

Comments (0)
Add Comment