லவ் மேரேஜ் – விமர்சனம்

 

விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், அருள்தாஸ் மற்றும் பல நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் லவ் மேரேஜ், படம் என்ன சொல்ல வருகிறது ?

32 வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாத நாயகனுக்கு நிச்சயம் செய்ய நாயகி வீட்டுக்கு செல்லும் நாயகன் குடும்பம் நிச்சயம் செய்துவிட்டு கிளம்புகிறார்கள். அவர்கள் வந்த பஸ்ஸில் ஏற அந்த பஸ் மக்கர் செய்ய அதை சரி செய்யும் நேரத்திற்குள் லாக் டவுன் போடப்படுகிறது ( அதாவது அது கொரோனா காலம் ).

வேறு வழி இல்லாமல் அங்கேயே தங்குவதால் மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு ஏற்படும் பிரச்சனைக்கு நடுவில் நிச்சயம் செய்த மணப்பெண் தன் காதலனுடன் ஓடி விடுகிறாள். பின் நடப்பது என்ன ? இதுவே லவ் மேரேஜ் இன் கதைக்களத்தின் முற்பகுதி. பிற்பகுதி என்ன படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

33 வயதை அடைந்த பின்பும் திருமணமாகாத இளைஞர்களின் தவிப்பை – அன்பை பகிர்ந்து கொள்ள துணை கிடைக்காத ஏக்கத்தை – கதையின் நாயகனாக விக்ரம் பிரபு தன்னுடைய அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார்.

அம்பிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஷ்மிதா பட்டை விட ராதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மீனாட்சி தினேஷின் குறும்புத்தனம் கலந்த இளமைத்தனம் மிக்க நடிப்பை ரசிக்கலாம்.

மாமாவாக நடித்திருக்கும் அருள்தாஸுக்கு மிகுந்த நற்பெயர் கொடுக்கிற வேடம்.அதில் நன்றாக நடித்து மேலும் நற்பெயர் பெறுகிறார். ரமேஷ்திலக், கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் பலமாக அமைந்திருக்கிறார்கள்.சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் வந்து போகிறார்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பிலும் குறையில்லை.

படத்தின் முடிவில் என்ன சொல்ல வருகிறார்கள். 32 வயதுக்கு மேல் திருமணம் ஆகாமல் இருந்தால் தவறா ? அல்லது ஏன் திருமணம் நடக்கவில்லை, என்ன பிரச்சனை என்று ஊர் மக்கள் பேசும்போது அவர்கள் வாயை அடைக்க ஏதாவது ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணுவது சரியா ? அல்லது கல்யாணம் என்பது மனது ஒத்து பிடித்து நடப்பது சரியா என்பதை இயக்குனர் எப்படி சொல்ல வருகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் படத்தை இயக்குனர் தொய்வு இல்லாமல் நடத்தி செல்கிறார். அந்த வகையில் பாராட்டுக்கள்..

 

ரேட்டிங் 3/5

love marriage movie reviewலவ் மேரேஜ் - விமர்சனம்
Comments (0)
Add Comment