கும்கி – 2 – விமர்சனம்

 

சாராயம் விற்கும் தாய்க்கு மகனாக பிறக்கும் நாயகன் மதி. சிறுவயதில் இருந்தே பாசத்திற்காக ஏங்கும் ஒரு ஜீவன். சாராயம் விற்பவரின் மகன் என்று பள்ளியிலும் யாரும் மதியிடம் சேர மறுக்கின்றனர்.. இதனால் வேதனைப்படும் மதியிடம், ஆசிரியர் ஒருவர் இயற்கையை ரசிக்கும்படி கூறுகிறார்.

அப்போது, வழி தவறி வந்த குட்டி யானை ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது,. அந்த குட்டி யானையை மதி காப்பாற்றுகிார்., பின்னர் அந்த யானை மதியை சுற்றி வருகிறது,. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமை ஆகிறார்,. இருவரும் சகோதரர்கள் போல் வளர்ந்து வருகின்றனர். இவர்கள் நட்பை பார்த்த மதியின் தாய் யானை குட்டியாக இருக்கும் போது அதற்கு விலை பேசி விற்க தயாராகி விடுகிறார்

மிகப்பெரிய அரசியல் பிரமுகர் தன் அரசியல் வளர்ச்சிக்காக அந்த யானையை பலி கொடுக்க விலை பேச யானை கைமாறுகிறது. இதை அறிந்த நாயகன் யானை கடத்திக்கொண்டு செல்ல, அதை கைப்பற்ற துரத்துகிறார்கள் அரசியல் பிரமுகரின் அடியாட்கள். இறுதியில் நடப்பது என்ன ? இது கும்கி-2வின் கதைக்களம்.

படம் எடுத்து நீண்ட நாள் ஆகிறது என்பது படத்தில் நடித்த நடிகரை பார்த்து நமக்கு தெரிய வருகிறது. கலைஞர் டிவி பெரேரா இறந்து பல வருடங்கள் ஆகிறது. அதனால் படத்தின் காலகட்டம் 6.7 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கும்கியில் நாம் பார்த்த காதல், நாம் ரசித்த நகைச்சுவை எதுவுமே இந்த படத்தில் இல்லை என்பது நமக்கு வருத்தம்.

யானையை பலி கொடுக்கும் அரசியல்வாதி அதைக் காப்பாற்ற நினைக்கும் நாயகன் இந்த ஒரு வரி கதைக்காக காடு, மலை, அருவி, பள்ளத்தாக்கு என படப்பிடிப்பை நடத்தி இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.

நாயகன் அறிமுகம்.. ஆனால் நடிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்  போல் இருக்கிறார். ஆனால் அவருக்கான கதாபாத்திரம் யானையை காப்பாற்றுவது மட்டுமே.

கதாநாயகி ஷ்ரிதா ராவ் ஒலியை சேகரிக்கும் ஒரு ஒலிப்பிரியை. கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.. ஆண்ட்ரூஸ், காமெடி என்ற பெயரில் நம்மை கடுப்பேத்துகிறார். கரகர குரலோன் அர்ஜூன் தாஸ், தன் பங்கை சிறப்பாக செய்து நம்மை ஆட்கொள்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னா இசை பின்னணி சிறப்பு. பாடல்கள் மக்களிடம் இன்னும் எதிர்பார்ப்பு. முக்கியமாக பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் சுகுமார், தன் கேமராவுக்கு வனத்தையும் அதன் இயற்கை அழகையும் சிறப்பாக படம் பிடித்து நம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறார்.

கும்கி-2- ஏமாற்றம்