குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஒரு கிராம மக்கள் கிணறு வெட்டும்போது, தண்ணீருக்கு பதிலாக டைனோசர் எலும்புகள் கிடைக்கிறது. இதனால் அந்த இடத்தை தொல்லியல் துறை கைப்பற்ற முயல்கிறது. தங்களது மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற யோகி பாபு மற்றும் கிராம மக்கள் போராடுவது தான் கதையின் மையம்.
சிற்பி மற்றும் கோவில் பூசாரியாக வரும் யோகி பாபு, நகைச்சுவையுடன் சமூக கருத்துகளையும் வெளிப்படுத்தி கதையை முன்னெடுத்து செல்கிறார். நாயகியாக வரும் லவ்லின் சந்திரசேகருக்கு குறைந்த அளவு காட்சிகள் இருந்தாலும் கதைக்கு தேவையான அளவில் நடித்துள்ளார்.
தொல்லியல் துறை அதிகாரியாக வரும் ரேச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக ராமகிருஷ்ணன் தங்களது கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர். ஹலோ கந்தசாமியின் இயல்பான டைமிங் காமெடி பல காட்சிகளில் சிரிப்பை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் தியாகராஜன் கிராமத்தின் வறண்ட சூழலை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் கதைக்கு ஏற்றபடி அமைந்துள்ளது.
மொத்தத்தில், ‘கெணத்த காணோம்’ – நகைச்சுவையுடன் சமூக உணர்வை சொல்லும் எளிமையான கிராமத்து படம்.