இறுதி முயற்சி – விமர்சனம்

 

ரஞ்சித் மெகாலி, மீனாட்சி, விட்டல் ராவ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இறுதி முயற்சி, படம் என்ன சொல்ல வருகிறது ?

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற பழமொழியை கதையின் கருவாக்கி திரைக்கதை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் வெங்கட்ஜனா.

ரஞ்சித் ஜவுளிக்கடை நடத்திவரும் தொழிலதிபர். நஷ்டத்தினால் கடன் வாங்கும் இவர் அந்த கடனை அடைக்க முடியாமல் படும் அவஸ்தையை படம்பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

நாம் கேள்விப்பட்டிருப்போம் கந்துவட்டி, ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி.. இதுபோல் வட்டி தொழில் செய்யும் விட்டல் ராவிடம் ரூபாய் 80 லட்சம் கடன் வாங்கும் ரஞ்சித்திற்கு அதை திருப்பித் தர வழி இல்லாமல் தவிக்கிறார்.

விட்டல் ராவோ பணம் தராவிடில் மனைவி மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவேன் என்று மிரட்ட, அதனால் ஏற்படும் மனக்குழப்பம், பண பிரச்சனை, இதற்கு நடுவில் ஒரு சைக்கோ கொலைகாரன் பிரச்சனை.. இறுதியில் ரஞ்சித் பணத்தை கொடுத்து கடனை அடைத்தாரா என்பதே மீதிக் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஞ்சித்திற்கு ஒரு படம்.. அதுவும் படத்தின் பெயர் இறுதி முயற்சி.. அவருக்கும் ஒரு இறுதி முயற்சி..

கடன் வாங்கிவிட்டு அதை தர முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டு தன் நண்பர்களிடம் உதவி கேட்கப் போகும்போது, அவர்களின் உண்மை முகம் தெரிய வருகிறது. இயலாமையில் ஒரு கோபம்.. மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ரஞ்சித். தான் பெற்ற பிள்ளைகளை கடன் தொல்லையால் கொன்று விடலாம் என்று எண்ணி அதற்கான முயற்சியில் இறங்கி அது தோல்வி அடையும்போது அந்த வேதனையை தாங்கிக் கொண்டு இறுதி முயற்சியாக குடும்பத்தினர் அனைவரும் விஷம் சாப்பிட்டு சாக நினைக்க அவர்களை காப்பாற்றுகிறார் சைக்கோ கொலைகாரன்.

மனைவியாக வரும் மெகாலி மீனாட்சி கணவனின் துயரம் கண்டு செய்வதறியாமல் தவிக்கும் குடும்பத்து பெண். தன் கதாபாத்திரம் அறிந்து மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

குழந்தைகள் இருவரும் தங்கள் பங்களிப்பை எதார்த்தமாக நடித்து சிறப்பு செய்திருக்கின்றனர். வில்லனாக விட்டல் ராவ் மிரட்டல் ராவ்.

படம் முழுக்க ஒரு பங்களாவை வைத்தே படமாக்கப்பட்டிருக்கிறது அதனால் என்னவோ நமக்கு ஒரு சலிப்பு தட்டுகிறது.  குறைந்த முதலீடு என்பதால் ஒரே பங்களா என்று நினைக்கிறோம். கதையும் நான்கு கதாபாத்திரங்களை சுற்றி வருவதால் ஒரு நாடகத் தன்மை தெரிகிறது

இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் ? கந்து வட்டி கடன் வாங்குவது தவறா ? அல்லது கடன் வாங்குவதே தவறா ? வாங்கிய கடனை எப்படி திருப்பி அடைப்பது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்வது தவறா?

படம் முழுக்க கடன் பிரச்சனை மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.  இறுதிக்காட்சியில் நம்ம அண்ணன் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார் ஒரு கம்யூனிஸ்ட் ஆக.

சைக்கோ கொலையை பற்றி தெளிவான விளக்கங்கள் தெளிவுபடுத்தவில்லை. படத்தின் விறுவிறுப்புக்காக இந்த சைக்கோ கொலைகார காட்சிகள் இறுதிக் காட்சியில் கதையுடன் இணைத்து அதை சரி செய்து விடுகிறார் இயக்குனர்.

 

இறுதி முயற்சி ;- நல்ல முயற்சி

 

வரம் சினிமாஸ் வழங்கும் இறுதிமுயற்சி

 

நடிகர்கள் மற்றும் குழு விபரம்

 

முக்கிய நடிகர்கள்

ரஞ்சித் – ரவிச்சந்திரன் – கதாநாயகன்

மெகாலி மீனாக்க்ஷி – வாணி – கதாநாயகி

மௌனிகா – கௌரி – கதாநாயகனின் மகள்

நீலேஷ் – குமரன் – கதாநாயகனின் மகன்

விட்டல் ராவ் – ராஜப்பா – வில்லன்

கதிரவன் – கதிரவன் – குற்ற ஆய்வாளர்

புதுப்பேட்டை சுரேஷ் – காத்தவராயன் – வில்லனின் தம்பி

முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் – வெங்கட் ஜனா

தயாரிப்பு நிறுவனம் – வரம் சினிமாஸ்

தயாரிப்பு – வெங்கடேசன் பழனிச்சாமி

படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ்

ஒளிப்பதிவு – சூர்யகாந்தி

இசை – சுனில் லாசர்

தயாரிப்பு நிர்வாகி – கே பி வேலு

கலை இயக்குனர் – பாபு எம் பிரபாகரன்

பாடல்கள் – மஷூக் ரஹ்மான்

ஒலி கலவை – ஆனந்த் ராம்சந்திரன்

பின்னணி – பாலு ஸ்டூடியோ

DI –  இன்பினிட்டி மீடியா

வி எப் எக்ஸ் – ஸ்ரீரஞ்சனி பி

எஸ் எப் எக்ஸ் – மதன்

வண்ணங்கள் – சேது செல்வம்

புகைப்படம் – மணிவண்ணன்

விளம்பர வடிவமைப்பு – ரெட் டாட் பவன்

இணை இயக்கம் – குருமூர்த்தி

விநியோகஸ்தர் – அஜய் பிலிம் பேக்டரி

PRO – வேலு

 

Thanks & Regards

Focus One Tv Team

www.focusonetv.com

இறுதி முயற்சி - விமர்சனம்