க்ரானி – விமர்சனம்

வடிவுக்கரசி கதையின் நாயகியாக வலம் வரும் க்ரானி என்ன சொல்லவருகிறது ?

வடிவுக்கரசி தன் கணவருடன் வாழ்ந்து வரும் வேளையில் வயோதிகம் வரும் நேரத்தில் கணவன் வடிவுக்கரசியை பிரிந்து சென்று 30 வருடம் கழித்து இளமையாக திரும்பி வருகிறான். இதற்கு காரணம் ஒரு அதிசய செடியின் பூவையும் மூன்று குழந்தைகளின் இதயத்தையும் சமைத்து சாப்பிட்டால் இளமை திரும்பும் என்ற உண்மையை தன் மனைவியிடம் சொல்கிறார். வயதான வடிவுக்கரசி தன் பேரப்பிள்ளைகளை கொல்லும் சமயத்தில் ஊரார் காப்பாற்றி வடிவுக்கரசி கணவரை தீக்கு இரையாகின்றனர் இது பழைய கதை.

ஃபாரினில் உழைத்து சம்பாதித்து சலித்து போனதால் பூர்வீக கிராமமான தமிழகத்தில் உள்ள வேட்டை குறிச்சி எனும் கிராமத்தில் தங்களுடைய எஞ்சியுள்ள வாழ்க்கையை இயற்கை விவசாயத்தை செய்து கழிக்கலாம் என தம்பதியினர் (ஆனந்த் நாக்) அவர்களுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் உள்ள பூர்வீக வீட்டிற்கு திரும்பி, அதனை புனரமைத்து வாழ தொடங்குகிறார்கள்.

அவர்களுக்கு அந்த ஊரின் ஆதிக்க சாதி சாதியை சார்ந்த முக்கிய பிரமுகர் (கஜராஜ் ) உதவி செய்கிறார். அவர்களுக்கு இரு ஸ்பெஷல் குழந்தைகள். அவர்கள் இருக்கும் வீடு வடிக்வக்ரசி வாழ்ந்த வீடு. மீண்டும் அங்கு திரும்பி வருகிறார் வடிவுக்கரசி தன் இளமையை மீட்டெடுக்க.. பிறகு என்ன நடக்கிறது ? இதுவே படத்தின் கதைக்களளம்.

இளமை திரும்புவதற்காக நூறாண்டுகளாக காத்திருக்கும் ஒச்சி கிழவி கதாபாத்திர வடிவமைப்பில் லாஜிக் இல்லை. இருப்பினும் அந்தக் கதாபாத்திரத்தில் மூத்த நடிகை வடிவுக்கரசி பிரத்யேக தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை மிரட்டி கவர்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பாத்திரம் அறிந்து சிறப்பாக செய்தாலும் நமக்கு வடிவுக்கரசியை தவிர வேற எந்த கதாபாத்திரமும் தெரியவில்லை. படம் முழுவதும் அவரே ஆக்கிரமித்துக் கொள்கிறார். ஒரு மச்சி வீட்டுக்குள் முழு படத்தையும் மிரட்டலுடன் எடுத்திருக்கும் இயக்குனருக்கு நமது வாழ்த்துக்கள்.

granny movie reviewக்ரானி - விமர்சனம்