பிளாஸ்ட் விமர்சனம்

 

அர்ஜுன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் பிரசன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பிளாஸ்ட் படம் என்ன சொல்லுகிறது

கராத்தே பயிற்சியாளர் அர்ஜுன் ஒரு மெடிக்கல் ஸ்டோர் வைத்துக்கொண்டு கராத்தே பயிற்சியும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிறார் தன் மகளுக்கும் தற்காப்பு கலையை சொல்லி நியாயத்தின் பக்கம் நிற்கச் சொல்லுகிறார் இந்த சமயத்தில் பிரீத்தி முகுந்தனின் செயினை அறுக்க வரும் திருடனை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் பிரீத்தி இரு சாதாரண கேஸ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அதற்குப் பின்னால் மிகப்பெரிய ஒரு விஷயம் இருக்க அதனால் அர்ஜுன் குடும்பத்தைக் கொள்ள கொலையாளிகள் வர அவர்களை கொன்று புதைத்து விடுகிறார்கள் அர்ஜுன் குடும்பத்தினர் கொலைக்கான காரணம் என்ன கொலையிலிருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் அந்த மிகப்பெரிய விஷயம் என்ன இதற்கு விடை காண பாருங்கள் பிளாஸ்ட்

அர்ஜுன் என்றால் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லை என்பது ரசிகனின் எதிர்பார்ப்பு அந்த எதிர்பார்ப்பை மிகச் சரியாக பூர்த்தி செய்து இருக்கிறார் அர்ஜுன் சண்டைக் காட்சிகளில் இவரின் சுறுசுறுப்பு 18 வயது இளைஞனைப் போல் ஒரு குடும்பத் தலைவனாக ஒரு மகளின் தந்தையாக மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராக என பல பரிமாணங்களுக்குள் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆக்ஷன் என்றாலும் அலட்டல் இல்லாத ஆக்சன் மிகவும் அருமை

அபிராமி குடும்பத் தலைவி என்று நாம் நினைத்து படத்தைப் பார்த்தால் ஆக்ஷனில் நான் கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை என்று அர்ஜுனுக்கு போட்டியாக சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்

நாயகி ப்ரீத்தி முகுந்தன் வழக்கமாக நாயகி என்றால் இரண்டு பாடல் காட்சி நான்கு காதல் காட்சி ஒரு சென்டிமென்ட் இப்படித்தான் இருக்கும் ஆனால் நம் கதாநாயகி விஜயசாந்திக்கு சவால் விடும் அடி தடி நாயகி சண்டைக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார் சிறப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்துடன் ஒரு ஆக்சன் படத்தை பார்க்க வேண்டுமென்றால் அது பிளாஸ்ட் படம் மட்டுமே காரணம் ஆக்சன் என்றால் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலைப்பாட்டை மாற்றி பெண்களும் சண்டைக் காட்சிகளில் சிறப்பு செய்திருப்பதால் இந்த படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஆக்சன் படம்

இயக்கம் சுபாஷ் K ராஜ் இவருக்கு இது முதல் படம் என்றாலும் திரைக்கதையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் போல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் காட்சிக்கு காட்சி ஒரு எதிர்பார்ப்புடனும் திரைக்கதையை வடிவமைத்து ரசிகனை கட்டிப்போட்டு வைத்து விடுகிறார்

பிளாஸ்ட் – கோடையில் ஒரு அக்னி ஆக்சன்

blast movie reviewபிளாஸ்ட் விமர்சனம்
Comments (0)
Add Comment