ஆழி – விமர்சனம்

 

மீன்பிடி படகு மெக்கானிக்காக இருப்பதுடன் மறைமுகமாக குற்றச் செயல்களில் ஈடுபடும் மனிதராக சரத்குமார்.. தனது மகளின் காதலனை கடத்தி ஆழ்கடலில் கொலை செய்ய முயல்வதும், அதிலிருந்து நாயகன் உயிர் தப்பிக்க போராடுவதும் கதையின் மையம். இப்படத்தை மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.

சரத்குமார் தனது அனுபவத்தால் கதையை தாங்க முயற்சிக்கிறார். குறிப்பாக வில்லத்தனத்திலும், தந்தை மனநிலையிலும் அவர் வெளிப்படுத்தும் இரு பரிமாணங்களும் கவனம் ஈர்க்கும்.

இளம் நாயகனாக வரும் இந்திரஜித் நடிப்பில் தேவையான பதட்டம் சில இடங்களில் குறைவாகத் தோன்றுகிறது.. தேவிகா சதீஷ் குறைந்த காட்சிகளிலும் இயல்பான நடிப்பால் நினைவில் நிற்கிறார்.

ஆழ்கடல் பின்னணியில் கதை நகர்வது புதுமையான முயற்சி. அந்த சூழல் தரும் தனிமை மற்றும் அபாய உணர்வை முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. திரைக்கதையில் இன்னும் வலிமை இருந்திருந்தால் பரபரப்பு அதிகரித்திருக்கும். ஜாஸி கிப்ட் இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சராசரியாக அமைந்துள்ளன.

இறுதிக்காட்சியில் தந்தை–மகள் பாசத்தை வெளிப்படுத்தும் தருணம் மட்டும் உணர்ச்சி ரீதியாக மனதில் நிற்கிறது.

மொத்தத்தில், வித்தியாசமான கருவை தேர்ந்தெடுத்தாலும், பலவீனமான திரைக்கதையால் எதிர்பார்த்த அதிர்வை முழுமையாக ஏற்படுத்தாத முயற்சியாக ஆழி அமைகிறது

aazhi movie reviewஆழி - விமர்சனம்