ரியோ ராஜ், மாளவிகாm விக்னேஷ் காந்த், ஜென்சன் திவாகர் முதன்மை கதாபாத்திரத்ங்களில் நடிக்க மற்றும் பலர் தங்கள் பங்களிப்புடன் வெளி வந்திருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது.
ஆண்பாவம்.. இந்த டைட்டிலை எந்த ஆணும் மறந்திருக்க மாட்டான். பாண்டியராஜன் இயக்கத்தில் வந்த இந்த வெற்றி படத்தின் டைட்டிலை பொல்லாதது என்பதை கூட சேர்த்து வந்திருக்கும் ஆண்பாவம் பொல்லாதது. படம் என்ன சொல்ல வருகிறது. ?
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ரியோ ராஜ் பெண் பார்க்கும் படலத்தில் நாயகி மாளவிகாவை கரம்பிடித்து தன் திருமண வாழ்க்கையை துவங்குகிறார். சிறப்பாக இருக்கும் திருமண வாழ்க்கை எப்படி கசக்கிறது என்பதை ஒரு எதார்த்தமாக தன் திரைக்கதை மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம், அதே சமயம் வாழ்க்கையின் எதார்த்தத்தை அலசி ஆராய்ந்து, அதன் காரணத்தை அறிந்து” ஈகோ எனும் ஒரு கருத்து வேறுபாட்டால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்களை ஆணும் பெண்ணும் அனுபவிக்கிறார்கள் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
கணவன் மனைவி கருத்து வேறுபாடு என்பது பல படங்களில் பல விஷயங்களில் நாம் பார்த்தும் தெரிந்தும் அறிந்தும் இருப்போம். ஆனால் ஆணாதிக்கம். பெமினிசம் ஆணும் பெண்ணும் சரிக்கு சமம் இப்படி பலவித வாதங்கள் வாழ்க்கைக்குள் கணவன் மனைவிக்கு வந்தாலும் இருவரும் சரிசமம் என்று கூறுவதை அதாவது 50 50 என்று சொல்வதை எல்லாவிதத்திலும் கடைபிடிக்க முடியாது.. சில விஷயங்கள் 70% ஆணும் 30 சதவீதம் பெண்ணும் மற்ற சில விஷயங்களில் பெண் 70 சதவீதமும் ஆண் முப்பது சதவீதமும் என்ற விகிதத்தில் தான் வாழ்க்கை வாழ முடியும் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ரியோ ராஜ் ஒரு சராசரி கணவன் எப்படி இருப்பான் என்பதை மிக அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். போலியாக மனைவியை திருப்தி படுத்துவதற்காக சரி சமம் என்று வாய் சொன்னாலும் மனது கேட்க மறுக்கிறது என்பதை இவர் தன் நடிப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தாலியை கழட்டி பீரோவில் வைத்திருக்கும் மனைவியை, அதற்காக திட்ட முடியாவிட்டாலும் அவள் செய்தது அவளுக்கு சரி என்று பட்டாலும் என் தாயும் சகோதரியும் கழுத்தில் தான் தாலி அணிந்து இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது, மனைவியின் கருத்துக்கு என் மனம் மாற காலங்கள் வேண்டும் என்ற வசனம் அனைத்து கணவர்களுக்கும் கண்டிப்பாக பொருந்தும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மூலம் ரியோ ராஜ் முன்னணி கதாநாயகன் வரிசையில் வருவார் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.
விக்னேஷ் காந்த் நாயகனின் வழக்கறிஞராக வருகிறார். வழக்கமாக படத்தில் இவர் அலம்பல் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அலம்பல் இல்லாமல் ஒரு சிறந்த எதார்த்த நடிப்பை மிக நகைச்சுவையுடன் வழங்கி அதேசமயம் கோர்ட்டில் இறுதிக் காட்சியில் இவர் வாதம் அனைத்தும் படம் பார்க்கும் ரசிகனை சரி என்று சொல்ல வைக்கும் விதத்தில் மிகச்சிறப்பாக தன் நடிப்பாற்றலை வழங்கி இருக்கிறார் .
நாயகி மாளவிகா. பெண்கள் பிரச்சனைகளுக்கு காரணம் அவர்கள் தோழிகளின் அறிவுரை தான் என்பது மாளவிகா மூலம் மற்ற பெண்களும் அறிந்து கொள்ள வேண்டும். கோபம், அழுகை, சிரிப்பு என அனைத்திலும் ஒரு அளவுகோல் வைத்து நடிப்பை வழங்கி இருக்கிறார். ஜென்சன் திவாகர் விக்னேஷின் உதவி வழக்கறிஞராக வருகிறார். சிரிப்புக்கு நான் கேரண்டி என்பதை உறுதிப்படுத்தியும் இருக்கிறார். அடுத்த தமிழ் சினிமாவில் இவர் ஒரு வலம் வருவது உறுதி.
ஒரு வாழ்க்கையை கதையாக எடுத்து அந்த வாழ்க்கைக்குள் வாழ்வியலை சொல்லி இருக்கும் இயக்குனருக்கு எமது வாழ்த்துக்கள்.
ஆண்பாவம் பொல்லாதது – எதார்த்தத்தின் நிதர்சனம்