தூத்துக்குடியை பின்னணியாக கொண்டு உருவான இந்த ஆக்ஷன் திரைப்படம், அப்பா–மகள் பாசத்தையும், மாஸ் ஹீரோயிசத்தையும் இணைத்து விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது. சாதாரண கார் மெக்கானிக்காக தொடங்கும் லெஜண்ட் சரவணனின் பயணம், அதிரடி நிறைந்த திருப்பங்களுடன் ஒரு பெரிய மாஸ் கதையாக மாறுகிறது.
லெஜண்ட் சரவணன், தனது இரண்டாவது படத்திலேயே முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக கவர்ந்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும், செண்டிமெண்ட் தருணங்களிலும் அவர் காட்டும் முன்னேற்றம் பாராட்டுக்குரியது. பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களை உறுதியாக தாங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் ஆகியவை படத்தின் வேகத்தையும் பிரமாண்டத்தையும் உயர்த்துகிறது. குறிப்பாக ஜிப்ரான் பின்னணி இசை ஆக்ஷனுக்கு நல்ல தூண்டுதலாக உள்ளது.
சில இடங்களில் லாஜிக் குறைகள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் மாஸ் எலிமென்ட்ஸ் காரணமாக படம் முழுக்க ரசிக்க வைக்கும்.
மொத்தத்தில்: குடும்ப பாசத்துடன் கூடிய ஒரு ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர்