யாரு போட்ட கோடு ; விமர்சனம்

 

பிரபாகரன், மெஹாலி மீனாட்சி, லெனின் வடமலை மற்றும் பலர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் படம் “யாரு போட்ட கோடு”. படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்.

நாயகன் பிரபாகரன் தொடக்கப் பள்ளி ஆசிரியர். அதேசமயம் சமூகப் போராளி. ஊரில் இருக்கும் சில டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி பள்ளி மாணவர்கள் அறப்போராட்டம். இதுவே படத்தின் ஆரம்பம்.. மிக அருமை

அந்த ஊருக்கு லெனின் வடமலை தலைவராக இருக்கிறார். ஊரில் இருக்கும் டாஸ்மார்க் பார்க்கும் எல்லாம் இவரே அதிபதி ஆனால் நாயகனின் சமூக போராட்டத்தால் இவரின் தொழில் பாதிக்கப்படுகிறது. நாயகனை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நாயகன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் சமூகப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

இறுதியில் என்ன ஆகிறது என்பதே படத்தின் கதைக்களம்.

நாயகன் பிரபாகரன் வேஷ்டி சட்டை உடன் படம் முழுக்க வருகிறார். வாத்தியார், சமூகப் போராளி.. ஆனால் அவரின் வசன உச்சரிப்புகள் மிக சாதாரணம். அதுவே அவரின் பலம். போராளி என்றால் கரகர குரலில் உச்சத்தொனியில் வசனங்களை உச்சரிப்பது தான் நம் தமிழ் சினிமாவின் வழக்கம். ஆனால் நமது நாயகன் அந்தப் போராட்டத்தை மெல்லிசையாக இசைத்திருக்கிறார்.

காதல் பிரச்சனையில் இருவரையும் சேர்த்து வைப்பார் கதாநாயகன். ஆனால் நம் நாயகனோ பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்து, பெற்றோர் விருப்பமில்லாமல் திருமணம் செய்வது தவறு. தமக்குத் தேவையானதை அனைத்தையும் பெற்றோரிடம் கேட்கும் பொழுது கணவனை மட்டும் நீங்களே ஏன் வாங்கிக் கொள்கிறீர்கள் ? இந்த வசனம் ஒவ்வொரு பெண்ணும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் விருப்பமில்லாத பெண்ணை பின் தொடர்வதும் தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

பள்ளி குழந்தைகளை அவர் முதலமைச்சர், கலெக்டர், போலீஸ் அதிகாரி, டாக்டர் என்று அவர்கள் எதிர்கால கனவை இப்போதே ஆரம்பித்து வைக்கிறார்.

நாயகன் பிரபாகரன் பார்ப்பதற்கு சிறுவயது விஜயகாந்த் போல இருக்கிறார். இவரின் எதிர்காலம் தமிழ் சினிமாவில் சிறப்பாக இருக்கும் என்பது நமது கணிப்பு.

நாயகி மெகாலி மீனாட்சி.. கிராமத்து முகங்களிலிருந்து மாறுபட்ட பட்டணத்து முகம் டீச்சராக வந்து நாயகனை காதலிக்கும்போது நாம் நினைத்ததை மீறி இடைவேளை காட்சியில் கழுத்தில் இருந்து தாலி எடுத்து குங்குமம் வைக்கிறார் நமக்கு அதிர்ச்சி.. யார் தாலி கட்டியது என்று. இடைவேளைக்கு பிறகு உண்மை தெரிந்ததும் நமக்கு ஒரு சிறிய ஆறுதல்.. ஆடல் பாடலுக்கு உறுதுணையாக இருந்து நம்மை சந்தோஷப்படுத்துகிறார்.

போராளி சிறுவனாக வரும் சே குவேரா முதல் படம் என்று தெரியாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் இவரின் வசனங்கள் மூலம் பல சீர்நோக்கு கொள்கைகளை இயக்குனர் நமக்கு சொல்லி இருக்கிறார்.

எதிர் நாயகனாக லெனின் வடமலை. ஊர் தலைவர் டாஸ்மாக் பாருக்கு சொந்தக்காரர். எதிர்கால எம்எல்ஏ சீட்டுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதி. இப்படி பல பரிணாமம். ஆனால் இவரின் முகச்சாயல் ஒரு வில்லன் நடிகரை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அவர் யார் என்று நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவரின் வசன உச்சரிப்பு சிறப்பு. படத்தின் இயக்குனரும் இவரே. இவருக்கு இது முதல் படம். ஆனால் முதல் படத்திலேயே பல படங்களை இயக்கியது போல் அனுபவம் இவருக்கு.

 

ஜாதிப்பிரச்சனை, தீண்டாமை, போலி அரசியல், மூடநம்பிக்கை என அனைத்தையுமே தன் படத்தின் நாயகன் மூலம் எடுத்துரைத்துக்கிறார்.

படம் எடுத்தோம் என்று இல்லாமல் மக்களுக்கு நாம் எனன கருத்தை சொல்லுகிறோம், அந்தக் கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை யோசித்து யோசித்து படத்தை இயக்கியிருக்கிறார். பல அறிவுரைகளையும் அரசுக்கு வழங்கி இருக்கிறார் சிறப்பு.

இதேபோல் இவரின் சினிமா பணி இருந்தால் தமிழ் சினிமா ஒரு சிறந்த இடத்துக்கு செல்லும் என்பது நமது எதிர்பார்ப்பு இயக்குனருக்கு நமது வாழ்த்துக்கள்.

 

யாரு போட்ட கோடு – இது இயக்குனர் போட்ட முதல் கோடு

yaru potta kodu movie reviewயாரு போட்ட கோடு ; விமர்சனம்