என்ன விலை – விமர்சனம்

 

ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் போடும் காணிக்கைகளை மூழ்கி எடுத்து பிழைக்கும் தவசிமுத்து [கருணாஸ்]. ஒரு நாள் கடலில் அவருக்கு முத்துக்கள் பதித்த விலைமதிப்பற்ற பதக்கம் கிடைக்கிறது. அதை நேர்மையாக போலீசில் ஒப்படைக்கப் போக, அந்த பதக்கத்தை அபகரிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி அவர் மீதே திருட்டு பழி சுமத்தி சிறையில் தள்ளுகிறார்.

நேர்மையாக நடந்ததற்காக திருடன் பட்டம் பெற்று குடும்பத்துடன் அவமானப்படும் தவசிமுத்து, தன் போன மானத்துக்கு விலை கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்காக வாதாட வருகிறார் வழக்கறிஞர் காஞ்சனா [நிமிஷா சஜயன்]. அரசு அந்த ஏழையின் மானத்தை மீட்டுக் கொடுத்ததா? என்பதே கிளைமாக்ஸ்.

கருணாஸ் இந்த படத்தில் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக மீடியாவுக்கு பயந்து போர்வைக்குள் குடும்பத்துடன் ஒளியும் காட்சியில் அந்த அவமானத்தை நமக்குள்ளும் கடத்துகிறார். அவரது மனைவியாக விஜயலட்சுமி, வக்கீலாக நிமிஷா சஜயன் இருவரும் அருமையான தேர்வு. நிமிஷாவின் கண்களே பாதி நடிப்பை பேசுகிறது. இறுதிக்காட்சியில் அரசு வக்கீலாக வரும் திரு ஒய் ஜி மகேந்திரன் வருகை பார்வையாளர்களை கவனிக்க வைக்கிறது

சஜீவ் பழூர் ஒரு சாதாரண மீனவனின் மானம் எவ்வளவு பெரியது என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை சாடிய விதமும், கோர்ட் காட்சிகளை கையாண்ட விதமும் அருமை. சாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும், ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல்

முக்கியமான விஷயத்தை இயக்குனர் மறந்து விட்டார் கடலில் கிடைத்த அந்த விலை மதிக்க முடியாத டாலரை கருணாஸ் முதலில் காவல்துறை காவலர் மோகன்ராம் இடம் தருகிறார் அவர் அதை வாங்கி இது கவரிங் என்று சொல்லி ஒரு வைரக்கல்லை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுக்க

கருணா ஸ் நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல

அதற்கு மோகன்ராம் பரவாயில்லை நீயே வைத்துக்கொள் என்று சொல்ல

பிறகு எதற்கு அந்த டாலருக்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை

தன்னிடம் கிடைக்கும் பொருளை யாராவது வேண்டாம் என்று சொல்லி நீயே வைத்துக் கொள் என்று சொல்வார்களா ?

அதுவும் போலீஸ்காரர்?

‘ ஒரு கதையை உருவாக்க ஒரு பிரச்சனையை தீர்வு காண பிரச்சனையை எதார்த்தமாக உருவாக்க வேண்டும்

ஆனால் இது செயற்கையாக உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது படத்தின் கதை ஆரம்பமே இது தான்

இதில் ஏன் இவ்வளவு குழப்பம் என்பது தெரியவில்லை .

என்ன விலை – ஒரு ஏழையின் மானத்திற்கு அரசு சொல்லும் விலை என்ன என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் அழுத்தமான படம்.

Comments (0)
Add Comment