
மிராய் ; விமர்சனம்
தன்னால் ஏற்பட்ட பேரழிவுக்கு மனம் வருந்துகிறார்.அசோக மன்னர். தன்னிடம் உள்ள சக்திகளை 9 புத்தகங்களில் அடக்கி வைக்கிறார்.. தன்னை மதிக்காத தாய் தந்தை உட்பட ஒரு கிராமத்தையே எரித்த சிறுவன் மஞ்சு மனோஜ்.. அவனை யார் என்று தெரியாமல் அழைத்து சென்று மந்திர ஜாலங்களை கற்றுத் தந்த குருவுக்கு எதிராக மந்திர புத்தகத்தை திருடி கிராம மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
அவர்களை தன் உயிர் கொடுத்து காப்பாற்றுகிறார் ஸ்ரேயா. எத்தனை புத்தகத்தை அடைந்தாலும் ஒன்பதாவது புத்தகத்தை என் மகனை மீறி அடைய முடியாது என்று மனோஜ்க்கு சவால் விடுகிறார் மனோஜ் மஞ்சுவுக்கு சவால் விட்டு இறக்கிறார் ஸ்ரேயா,
அகத்தியர் வாக்கின்படி உலகை காப்பாற்ற தனது மகனை வாரணாசியில் அனாதையாக விடுகிறார்.. அதன்படி தேஜா சஜ்ஜா ஆதரவின்றி வளருகிறார். 9-வது புத்தகத்தை வில்லன் அடைய வரும்போது, ராமரின் ஆயுதமான மிராயை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்பது விதி.. இந்த உண்மை தேஜா சஜ்ஜாவுக்கு தெரியவரும்போது அதிர்ந்து போகிறார்.. அதை அவர் நம்பினாரா ? ஒன்பதாவது புத்தகத்தை காப்பாற்றினாரா என்பதே மீதி கதை.
தேஜா இளம் காளையாக முதல் பாதியில் சராசரி மனிதனாக, இரண்டாம் பாதியில் சீறிவரும் காளை ஆக இரு வேறு பரிமாணங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார். ஹனுமான் வெற்றிக்கு பிறகு இன்னொரு மிகப்பெரிய வெற்றியை இவருக்கு இந்த படம் தரும் என்பதில் ஐயமில்லை.
நாயகி ரித்திகா தேவலோக அழகிகள் ரம்பா, ஊர்வசி, மேனகை இவர்களுக்கு அடுத்து ரித்திகாவை சொல்லலாம் வெண்கல சிலையை வெண்ணையில் வடித்தாற்போல் அழகு பதுமையாக நாயகனுக்கு உறுதுணையாக தன் நடிப்பாற்றலை வழங்கி இருக்கிறார்.
மனோஜ் மஞ்சு வில்லத்தனத்தில் மிரட்டினாலும் அவர் முகச்சாடையில் வில்லனுக்குரிய அம்சங்கள் இல்லை. ஆனால் சிறு வாலிபனாக வருபவர் மிரட்டி இருக்கிறார். மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
படத்தில் முக்கியமாக பாராட்ட வேண்டியது கேமராமேனையும் கிராபிக்ஸ் வடிவமைப்பாளரையும் தான் அசத்தியிருக்கின்றனர். பார்ப்பதற்கு படம் சிறப்பாக இருந்தாலும் பாசிச கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு பிரச்சார படமாக நமக்கு தெரிகிறது. இதேபோல் தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழில் ரிலீஸ் ஆனால் ஆந்திராவில் பிஜேபி ஜெயிச்சது போல் இங்கும் ஜெயிப்பது நிச்சயமாகிவிடும்.
மிராய் – பாசிச அரசியலின் படம்
